கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம்
*கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!*
Zee studios & Drumsticks Productions தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது !!
Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ்- மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி...









