‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம் 3/5
‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம்
சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும், உத்தரவுக்கும் அடிபணியாமல் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள பயங்கரமான ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், கொஞ்சம் லாஜிக் மீறலோடும் சொல்வது தான் ‘பிபி 180’.
யின் நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில், தைரியமான பெண்ணாக நடித்திருக்கு...









