விஜயசேதுபதியின் கருப்பன் படத்தில் முதலிரவு காட்சி..!
ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் 'கருப்பன்'. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது.
"இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளி வந்திருக்கிறது. மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடல் எடையை குறைத்து வர...









