சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

போட்டோவை கமெண்ட் அடித்த ரசிகர்… கடுப்பான நடிகை நந்திதா!

போட்டோவை கமெண்ட் அடித்த ரசிகர்… கடுப்பான நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் பொதுவாகவே சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருவது வழக்கம். அதேபோன்று நடிகைகள் தங்களது புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டால் ஒன்று அதை வைரலாக்குவார்கள் அல்லது அதில் ஏதாவது குறை இருந்தால் அதை வைத்தே ட்ரோல் செய்து வருவார்கள். இப்படி செய்வதால் சில சமயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகைகளும் பதிலளித்து வருவர். அந்த வகையில் நடிகை நந்திதா, வெளியிட்டுள்ள போட்டோவை கிண்டல் செய்த  நெட்டிசன்களுக்கு  அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார் படங்களில் பிஸியாக நடித்து வரும் நந்திதா, சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். இந்நிலையில்  நடிகை நந்திதா  சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகை...
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பில்லாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்... ஆனால் மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் திமுகவின் அராஜகம் அத்துமீறலுக்கு மாநில தேர்தல் ஆணையம் துணைபோகிறது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.      ...
தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் பேசிய அவர், கூறுகையில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், குடும்ப அட்டைக்கு செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்கள் செய்தார்களா?  மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாக சொன்னார்கள் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். கஜானாவை காலி செய்து விட்டு சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட  திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் மதக...
”ஒரே மடக்கில் ஒரு பாட்டில் ஓட்கா” சரக்கடிக்கும் சவாலில் சிக்கி உயிருக்கு போராடும் வாலிபர்!

”ஒரே மடக்கில் ஒரு பாட்டில் ஓட்கா” சரக்கடிக்கும் சவாலில் சிக்கி உயிருக்கு போராடும் வாலிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  சவால் விடலாம்... வரும் சவாலை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றலாம்... அதிலும் ஆபத்தான சவால்கள் தவிர்க்கப்பட வேண்டும்.  நண்பர்களின் சரக்கடிக்கும் சவாலில் சிக்கி வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார்... அதென்ன சவால்... இளைஞர் ஒருவர் நண்பர்களின் சவாலை ஏற்று, ஒரே மடக்கில் முழு ஓட்கா மதுபாட்டிலை குடித்து முடித்துள்ளார். இதையடுத்து உடல்நல பாதிப்புக்கு ஆளான அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சான்டுல்லி. 19 வயதாகும் இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மிசோரி பல்கலைக் கழகத்தின் ஹாஸ்டலில் சேர்வதற்காக சென்றுள்ளார். அங்கிருந்த அவரது நண்பர்கள் சான்டுல்லியிடம், 'ஒரே மடக்கில் ஓட்காவை குடித்து விடுவாயா?' என்று ஏளனமான தொனியில் சவால் விட்டுள்ளனர். இதன...
தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!

தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
  மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடினார். இந்நிலையில், மீண்டும் மேக்ஸ்வல்லை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது   இந்நிலையில், மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது இந்நிலையில், தம்பதியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகி...
“காலை எடுத்துட்டாங்க” கதறும் இயக்குனரும்… கண்டு கொள்ளாத RKசெல்வமணியின் பதவி ஆசையும்…

“காலை எடுத்துட்டாங்க” கதறும் இயக்குனரும்… கண்டு கொள்ளாத RKசெல்வமணியின் பதவி ஆசையும்…

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
"காலை எடுத்துட்டாங்க" கதறும் இயக்குனரும்... கண்டு கொள்ளாத RKசெல்வமணியின் பதவி ஆசையும்...   https://youtu.be/WbP7kF8jE48
ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது....
கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்!

கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகைச்சூடும் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் காங்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது. சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தார் விஷால். கை வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. இதனால், நடிகர் விஷால் சிகிச்சைக்காக கேரளா சென்றிருக்கிறார். லத்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மார்ச் மாதம் தொடர...
ஜெயம் ரவியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு!

ஜெயம் ரவியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'பூலோகம்' படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் அடுத்ததாக ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'ஜே.ஆர் 28' என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘அகிலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விவேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அகிலன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்தது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....