வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

சூழல் வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூழல் வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வெப்தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில்  ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வா குவாட்டர் கட்டிங்', ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர்கள் திரைக்கதை எழுதியுள்ள வெப் தொடர் ‘சூழல்’. இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப்தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்....
ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு!

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை விடுவிக்கவும், கூடுதலாக 200 கோடி டாலர் கடன் வழங்கவும் கோரி சர்வதேச நிதியத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பெட்ரோல், டீசல் மீதான மானியத்தை நீக்கி, விலையை உயர்த்துமாறு சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக பாகிஸ்தான் உயர்த்தியது. இந்தநிலையில்,...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி ...
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ‘செம்பி’ படத்தின் டிரெய்லர்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ‘செம்பி’ படத்தின் டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் ‘செம்பி’. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.  இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் ‘செம்பி’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது, இதன் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே படத்தின் ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்திய...
வைரலாகும் சூர்யாவின் டுவிட்!

வைரலாகும் சூர்யாவின் டுவிட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்த...
”வேணும்னா படிச்சிக்கப்போறாங்க நீங்க இந்தியை திணிக்காதீங்கப்பா அது தப்பு” என்கிறார் RJ பாலாஜி

”வேணும்னா படிச்சிக்கப்போறாங்க நீங்க இந்தியை திணிக்காதீங்கப்பா அது தப்பு” என்கிறார் RJ பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், தமிழக அரசியல், நடிகர்கள்
”வேணும்னா படிச்சிக்கப்போறாங்க நீங்க இந்தியை திணிக்காதீங்கப்பா அது தப்பு” என்கிறார் RJ பாலாஜி   https://youtu.be/D0K7FRAFSrE
நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார். இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்....
சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!

சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்  இன்று நடைபெற்ற மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஒரு நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு,  ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு. சமீபத்தில் நாங்கள் 8 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம். இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் நாட்டை முன்னேற்றி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் எளிதான வணிகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்...
சிவா இயக்கத்தில் விஜய்? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

சிவா இயக்கத்தில் விஜய்? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் பல படங்களை இயக்கியதை அடுத்து கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர் இயக்குனர் சிவா. இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு விஜய், சிவாவிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய்யின் 68-வது படத்தை சிவா இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது....
கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு க...