செல்போனை தடை செய்தால் இந்த உலகமே அப்படியே நின்றுவிடும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
”VKAN V Solution Private Limited” என்னும் மென் பொருள் நிறுவனம் 3 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான FEFDY பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உயர்திரு மனோ தங்கராஜ், சுகாதாரம், திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர், திரைப்பட நடிகர் திரு. தமன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது, ”இது திருமதி விமலாராணி பிரிட்டோ அவர்கள் இரண்டு குழந்தைகளின் தாய், இப்பொழுது மூன்றாவது குழந்தைக்கும் தாயாக மாறி இருக்கிறார்கள்.
ஆம், இந்த கல்வி மேம்பாட்டிற்கான மென்பொருள் ஆஃப் ஆனது விமலாராணி மூன்று ஆண்டுகள் கருவாக சுமந்து பெற்றெடுத்த குழந்தை. எப்பொழுதுமே பிஸியாக தன்னை வைத்துக் கொள்பவர் விம...









