பான் கார்டை ஆதாருடன் இணைக்க 2023 மார்ச் 31 வரை அவகாசம்!
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது மார்ச்.31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது.
பான் கார்டு என்பது அனைவரும் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் கார்டு என்பது கட்டாயமான ஒன்றாகும்.
ஒருவர் கட்டும் வருமான வரி கணக்கிடப்படுவது பான் எண் அடிப்படையில்தான்.
அதேபோல், ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நம்முடைய அனைத்து பயன்பாட்டிலும் அது தொடர்புடைய ஒன்றாக இருந்து வருகிறது.
வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பு, நம்முடைய மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாக இருந்து வருகிறது
அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருமான வரித்துறை...









