வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை  தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ...
ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை  இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், திரைப்படங்கள்
  ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கீ’. புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் சிங்கிள் பாடல் ஒன்றை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ‘ராஜா பாட்டு...’ என்ற பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வரும் நவம்பர் 28ம் தேதி இரவு 7.45 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது....
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  1400 வருடம் முன் சூரியனில் இருந்து விழுந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு அபூர்வ பொருளைத் தேடும் இந்திய தொல்லியல் துறையின் வீர தீரம் தான் கரு! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு சிறியதுகள் பூமியில் வந்து விழுகிறது.மனிதனுக்கு ஏற்படும், எப்பேர்பட்ட காயங்களையும், தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள்அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள்காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.இதை தொல்பொருள்ஆராய்ச்சியின்பேராசிரியராக இருக்கும் சச்சின்கேதகர் தேட ஆரம்பிக்கிறார். இவரிடம் உதவியாளராக வந்துசேருகிறார் இந்திரஜித். -கௌதம் கார்த்திக், அதேநேரத்தில் ,இந்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த அதிகாரிஒருவரும் அந்தப்பொருளைத்தேடுகிறார். இறுதியில் அந்த சக்தி வாய்ந்தசிறு துகள் யாரிடம் கிடைத்தது...
தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், வீடியோ
  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை. ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது. இந்த படத்தின் ஆடியோவை மலேசியாவில் வெளியிட்டார்கள். மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங...
RK நகர் இடைத்தேர்தல் விவரங்கள்

RK நகர் இடைத்தேர்தல் விவரங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தற்குட்பட்ட ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற டிசம்பர்-21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான சட்டம் ஒழுங்கு பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளின் அட்டவணை பின்வருமாறு வேட்பு மனுதாக்கல் துவக்க நாள்- 27.11.2017 (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள்- 04.12.2017 (திங்கட்கிழமை) வேட்பு மனு பரிசீலனை- 05.12.2017 (செவ்வாய்கிழமை) வேட்புமனுவினை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்- 07.12.2017 (வியாழக்கிழமை) தேர்தல் நாள்- 21.12.2017 (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நாள்- 24.12.2017(ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடவடிக்கைகள் இந்த நாளுக்கு முன்பாக முடிவுறும் நாள் 26.12.2017(செவ்வாய்கிழமை) இந்த தேர்தலை முன்னிட்டு காவல்துறை சட்ட ஒழுங்கு பார்வையாளராக இம்மானுவேல்...
விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை..!

விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை .  விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388படத்தின் கிளர்ச்சியூட்டும் முதல் பார்வை .    விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23,புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு,இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு  ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின்  படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற...
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் இந்திரஜித் – இயக்குனர் கலா பிரபு

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் இந்திரஜித் – இயக்குனர் கலா பிரபு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது!- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு கலாபிரபு... தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம். ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார். படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து... இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே? என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும். டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன். அதன...
விஜய் யேசுதாஸ் படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்

விஜய் யேசுதாஸ் படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான "லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா... " எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர். படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது....
ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்

ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.  தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார்.  “எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ...