சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
      சென்னை ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காகது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..  நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், குடியரசு தினத்தை ஒட்டி வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என். சுவாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, ”எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் சொல்ல அந்த உத்தரவை காட்டுங்கள் என கேட்டபோது, ...
பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...
பிக்பாஸ் அல்டிமேட் – அடுத்த போட்டியாளர்!

பிக்பாஸ் அல்டிமேட் – அடுத்த போட்டியாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் - அடுத்த போட்டியாளர்! பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி போட்டியாளராக சினேகன், ஜூலி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்ததாக வனிதா செல்ல இருக்கிறார். இதற்கான புரமோ இன்று மாலை வெளியாக இருக்கிறது....
சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால், 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 17 அல்லது 18 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என்று ...
91- வது வயதில் விருது கிடைத்தது மகிழ்ச்சி – சவுகார் ஜானகி!

91- வது வயதில் விருது கிடைத்தது மகிழ்ச்சி – சவுகார் ஜானகி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
91- வது வயதில் விருது கிடைத்தது மகிழ்ச்சி - சவுகார் ஜானகி! நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அவர் 70 வருடங்களாக சினிமாவில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார். பாலசந்தர் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்தார். இதில் இரு கோடுகள், பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகியவை அடங்கும். எதிர்நீச்சல் படத்தில் அவர் நடித்த பட்டுமாமி கதாபாத்திரம் தேசிய அளவில் புகழ் பெற்றது. புதிய பறவை, தில்லுமுல்லு படங்களில் கிளப் பாடகியாக நடித்துள்ளார். இவர் ஜெமினி கணேசனின் தோழி ஆவார்...
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்! தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தபு தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்....
மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி!

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி! தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகும் போலா சங்கர் என்ற படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்றிலிருந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக கடந்த நவம்பர் நவம்பர் மாதம் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது....
சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.   நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரபா அத்ரே, ராதேஷ்யம் கேம்கா, கல்யாண் சிங் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பிரபல பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் கலை ச...
பொதுவெளியில் அசிங்கமாக பேசிவிட்டு, பத்திரிகையாளரிடம் ரகசியமாக செல்போனில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்!

பொதுவெளியில் அசிங்கமாக பேசிவிட்டு, பத்திரிகையாளரிடம் ரகசியமாக செல்போனில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிருபரை அசிங்கமாகத் திட்டியது மைக்கில் கேட்டு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நுகர்வோர் விலைகள் டிசம்பரில் திடமாக அதிகரித்தன, இதனால் பணவீக்கம் அதிகரித்தது. இது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் காலக்கட்டத்தில் பணவீக்கத்தில் மிகப்பெரிய வருடாந்திர உயர்வு ஆகும், இது உச்சமாகும். இதைத்தான் அந்த நிருபர் பைடனிடம் கேள்வி எழுப்பினார், பணவீக்கம் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்றார். பைடனின் காம்படிஷன் கவுன்சில் கூட்டத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டபோது, ​​ வெள்ளை மாளிகை நிருபர் பீட்டர் டூசி, பணவீக்கம் பற்றி கேட்பது சரியா என்றும் அது அரசியல் கடன் தானா என்றும் கேட்டார். பணவீக்கம் குறித்த நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த ஜோ பைடன் ” “பணவீக்கம் ஒரு பெரிய சொத்து,...