மாறன் சகோதரர்களை கடுமையாக சாடிய திமுக எம்.பி!
ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன கட்சிகள். அப்படி அதிமுக விளம்பரம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமானதுதான் சன் குழுமம். அதன் முக்கிய சேனலான சன் டிவியில் இப்படியான விளம்பரம் ஒளிபரப்பானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தர்மபுரியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் குரலெழுப்பியுள்ளார்.
அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட...









