சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் வந்தனர். மாவட்ட எல்லையில் அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 67 வயது முதியவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இந்த தகவல் அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக கூறப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகத்தான் திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் ‘‘புட்டபர்த்தியிலிருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே...
கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம்

கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை... திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! - கொரானா சுவாரஸ்யம் கொரானா பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாத மத்தியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற மே 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும். இந்தநிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தி திறந்தவெளி உணவகங்கள், கடைகளுடன் கூடிய சிற்றுண்டி சாலைகள் மற்றும் நூலகங்களை திறக்க லிதுவேனிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. எனினும், அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் விமானபோக்குவரத்து இல்லாத காரணத்தால் தலைநகர் வில்னியூசில் உள்ள சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. இதைப் பயன்படுத்தி அங்கு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி முடிக்க வில்னியூஸ் நகர சர்வதேச திரைப்பட கமிட்டி முடிவு செய்தது. அதன்படி விமான நிலையத்தின் உ...
ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்!

ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்! கொரானாவால் உலகமே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி இருக்கிறது. திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் 24 மணிநேரமும் பிசியாக பரபரப்பாக இருந்தவர்கள் இப்போது 24 மணி நேரமும் வீட்டில் முடங்கி இருப்பதால் அந்த நேரத்தை பிரபலங்கள் தங்களுக்கு விருப்பமான விஷயங்களை செய்து வருகின்றனர். சிலர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சகோதரருடன் கபடி விளையாடி ஊரடங்கு நேரத்தை பொழுது போக்கி வருகிறார். வீட்டிற்குள் சகோதரருடன் கபடி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத்தி சிங். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/tv/B_rVVBhh...
ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி!

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி! கொரானா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். ஹம் ஹர் நஹி மானங்கே என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரகுமான் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோகித் செளகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், சுருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரகுமான் போன்றோர் இணைந்து பாடியுள்ளனர்.  இந்தப் பாடலை HDFC வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் சமூகவலைத் தளங்களில் ஒவ்வொருமுறை பகிரப்படும்போதும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 ...
ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலைக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரானா தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு முழு அடைப்பு என்ற அணுகுமுறை ஓரளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்றாலும் இதுவரையிலான முழு அடைப்பு காலத்தை உரிய விதத்தில் மத்திய-மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதி விரைவு சோதனைகள் செய்யவும்; நோயால் பாதிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சுகாதார கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் ஏற்படுத்திக் கொள்ளவும்; மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்புக் கருவிகளை தருவித்துக் கொள்வதற்கும் இந்த முழு அடைப்பு காலத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் மக்கள் எவ்வளவு கட்டுப்பாடு காத்தும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை இவர்களால் மட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்வர...
பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு!

பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு! உலகையே உலுக்கி வரும் கொரானா வைரஸ் இதுவரை 210 நாடுகளுக்கு பரவி பல லட்சம் மக்களை பாதித்து உள்ளது. தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரானாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம்  வரை நீட்டித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடி இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஜூலைவரை ஊரடங்கை நீடித்த முதல் நாடு...
ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை* *அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்* *சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்* *சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்* *கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்ச...
கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை!

கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை! கொரானா பாதிப்பின் காரணமாக எல்லா ஸ்கூல்களும் 2 மாசங்களாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்தே இ-புத்தகம் மூலமாக படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரானா பாதிப்பின் தாக்கம் மற்றும் மாணவர் களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்படுது. இதனிடையே ஒரு சில தனியார் பள்ளிகளில் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுளளது. இது தொடர்பாக மெட்ரிகுலே...
கொரானா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்- அரசுக்கு லாரன்ஸ் நன்றி!

கொரானா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்- அரசுக்கு லாரன்ஸ் நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    "கொரானா வைரஸ்" பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்! நமது அரசாங்கத்திற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்! நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்! நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார், எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள், இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான ரவி சார் அவர்களுக்கு தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தார். அப...
பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி… மக்களுக்கு மோடி அரசின் பச்சை துரோகம் – சீமான்

பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி… மக்களுக்கு மோடி அரசின் பச்சை துரோகம் – சீமான்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    பணக்காரர்களுக்கு வங்கி கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் மோடி அரசு என ஆவோச அறிக்கை வெளியிட்டார் சீமான். 50 இந்திய பணக்கார தொழிலதிபர்கள் வாங்கிய வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் கணக்கியல் ரீதியான கடனை நீக்குவது என்பது முழுவதுமாக கடனை நீக்குவது ஆகாது என்றும், கணக்கில் நீக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து கடன் தொகையை பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கொரோனாவினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை விட்டு விட்டு பெருமுதலாளிகளின் கடனை நீக்குவது மோசமான செயல். மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்...