சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!? உலகம் முழுதும் அச்சுறுத்தல் செய்து வரும் கொரானா வைரஸ் பீதி தமிழ் சினிமா உலக்த்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரைப்பட விழாக்கள் ஏற்கனவே கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அரசு தமிழக எல்லையோர மாவட்ட தியேட்டர்களையும், ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவிட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பல பட ரிலீசும் தள்ளிப்போகிறது. கடைசியாக எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நளை முதல் சினிமா, டிவி தொடர்பாக எந்த ஷூட்டிங்கும் நடக்காது வரும் 31வரை இதே நிலை நீடிக்கலாம் என தெரிகிறது....
கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது - தமிழக அரசு உத்தரவு உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜே‌‌ஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வார்டு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்...
நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் - மாஸ்டர் விழாவில் விஜய் கலகல மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசியதாவது… என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே… எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க. விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு. ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு. ம...
உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்

உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் - மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச் மாஸ்டர் ஆடியோ விழாவில்  விஜய் பேசும்போது ,ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார். "ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க… என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு. நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும். ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும். விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார். 20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க. அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி என்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது....
சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் ஒதுக்கீடு - வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவிப்பு உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்...
கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் - முதல்வர் உத்தரவு மார்ச் 31 ம் தேதி வரை 16 மாவட்டங்களில் வணிக வளாகம், திரையரங்குகளை மூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. அம்மாவின் அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிந...
எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கெல்லாம் கொரானா வரவே வராது - சொல்கிறார் நித்தி! சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்...
ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்

ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு - கோடங்கி விமர்சனம் வரிசையா திருட்டு நடக்கும் அதை கண்டுபிடிச்சி தப்ப தட்டிக்கேப்பார் ஹீரோ... இப்படித்தான் பல கதைகள் பாத்திருப்போம். ராஜ்தீப் இயக்கி இருக்குற அசுரகுரு படத்துல ஹீரோ விக்ரம்பிரபுவே பெரிய திருடன். ஸ்மார்ட்டா திட்டம் போட்டு திருடுவார். அப்படி திருடுன பண்த்தை என்ன பன்றார்... கதாநாயகி மஹிமா ஒரு டிடெக்டிவ்... அவங்களும் திருடன தேடுவாங்க... திருடன் சிக்குனானா இல்லியான்னு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க. வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு விக்ரம்பிரபு ரொமப எதிர்பார்த்த படம் இது. ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கார். அதே மாதிரி மஹிமா நல்ல கதாபாத்திரம். ஸ்மார்ட்டா அழகா நடிச்சிருக்காங்க. யோகிபாபு காமெடி பெருசா ஒர்க் அவுட் ஆகல. இன்னும் திரைக்கதையில கவனம் செலுத்தி இருந்தால் அசுரகுரு அசத்தலா இருந்திருக்கும்....
கொரானா தொற்றுநோயை  தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

கொரானா தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர். கேரளாவில் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டன. தெலங்கானாவிலும் பொது மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்பால்...
உறியடி விஜயகுமார் நடிப்பில் கன்னிமாடம் போஸ்வெங்கட் இயக்கும் விளையாட்டுப்படம்!

உறியடி விஜயகுமார் நடிப்பில் கன்னிமாடம் போஸ்வெங்கட் இயக்கும் விளையாட்டுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்* மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது. ...