சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

மின் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

மின் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொது மக்களை நேரில் அழைத்து கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மதுரையில் தள்ளாக...
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசின் உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக்கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஆன்ல...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் இவர் வடக்கு அயர்லாந்தின் மெக்னாலை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.  ...
பொன்னியின் செல்வன் கதை களம் நகர்வதே தூதுவன் வந்தியத்தேவனின் பார்வையில் தான்!

பொன்னியின் செல்வன் கதை களம் நகர்வதே தூதுவன் வந்தியத்தேவனின் பார்வையில் தான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழகத்தின் பெருமையாக விளங்குவது சோழ பாண்டியர்களின் வரலாறு தான். அதில், சோழர்களின் பெருமையை விவரிக்கும் வகையில், வரலாற்று உண்மைகளுடன் சேர்த்து, 1950களில், கல்கியால் எழுதப்பட்ட ஒரு மாபெரும் கதை தான் பொன்னியின் செல்வன். அதனை படமாக்க, பல வருடங்களாக எம்ஜிஆர் உட்பட பல பெரும் திரைப் பிரபலங்கள் இக்கதையை படமாக்க முயற்சி செய்த நிலையில், பல ஆண்டு தமிழ் சினிமா பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் வகையில் பொன்னியின் செல்வன்  படம் மணிரதனத்தின் படைப்பாக உருவாகி இருக்கிறது. பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதில், முக்கிய கதாபாத்திரங்கள் சுமார் 30 இருக்க, ஐஸ்வரியா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, சரத் குமார், ஆர் பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வரியா லக்ஷ்மி, ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளன...
கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்! முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்! முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அமைதி ஊர்வலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அவரது நினைவைப் போற்றும் வகையில் திமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்கால் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைதிப்பேரணி நடைபெற்றது...
சவுக்கு “சாக்கடை”  சங்கர் பத்திரிகையாளரா? புரோக்கரா?  விளாசும் கோடங்கி

சவுக்கு “சாக்கடை” சங்கர் பத்திரிகையாளரா? புரோக்கரா? விளாசும் கோடங்கி

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
சவுக்கு "சாக்கடை" சங்கர் பத்திரிகையாளரா? புரோக்கரா? விளாசும் கோடங்கி   https://youtu.be/5bTpewEwtn4
பொய்க்கால் குதிரை வேகமெடுக்குமா? கோடங்கி விமர்சனம்

பொய்க்கால் குதிரை வேகமெடுக்குமா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  முந்தய படங்களால் ஆபாச இயக்குனர் என்று பெயரெடுத்து கேவலப்பட்ட சந்தோஷ் பி ஜெயக்குமார் அட பரவாயிலையே என சொல்லும் அளவுக்கு கொடுத்த படம்தான் பொய்க்கால் குதிரை. நடன புயல் பிரபுதேவாவை ஒற்றைக்காலில் நடிப்பு புயலாக மாற்றிய வித்தைக்கு இயக்குனரின் முந்தய ஆபாச அர்ச்சனைகளை மறந்து மன்னிக்கலாம். கதைப்படி, ”விபத்து ஒன்றில் தனது மனைவியையும், ஒரு காலையும் இழக்கிறார் பிரபு தேவா. பின்னர்  தனது மகள் தான் உலகம் என்று வாழ்க்கையை நகர்த்த, அவரது மகள் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. மகளை காப்பாற்ற தேவைப்படும்  பணத்திற்காக தவறான பாதைக்கு போக பிரபு தேவா முடிவு செய்கிறார். ஆனால், அப்போது நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள், அவரை வேறு ஒரு பாதையில் பயணிக்க வைக்க, இறுதியில் அவர் தனது மகளை காப்பாற்றினாரா இல்லையா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பொய்க்கால் குதிரை’ பட கதை.   ஏற்கனவே நடன புய...
முழுநீள திரைப்படம் பார்த்த திருப்தி கொடுக்கும் “ஜதி” ஆல்பம்!

முழுநீள திரைப்படம் பார்த்த திருப்தி கொடுக்கும் “ஜதி” ஆல்பம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
முழுநீள திரைப்படம் பார்த்த திருப்தி கொடுக்கும் "ஜதி" ஆல்பம்! மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி, சினிமா போல் தயாரித்துள்ள ஆல்பம் "ஜதி" பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. கூடை சுமந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்ணின் சிறிய மகள், பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொள்கிறாள். மகளின் ஆசையை நிறைவேற்ற தாய் முயற்சிக்கும் போது, உன்னால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியாது. தகுதிக்கு மேல் ஆசைப்படாதே எனக்கூறி, விரட்டப்படுகிறார்கள். இதைப் பார்த்த மற்றொரு குரு, அந்தச் சிறுமியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்டு, அவளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அரங்கேற்றம் செய்து வைக்கிறார். மகளின் கனவை நிறைவேற்றும் தாயாக கோமதி நடித்துள்ளார். மகளாக சரண்யாஶ்ரீ நடித்துள்ளார். கற்றுக் கொடுக்கும் குருவாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் முரளி நடித்துள்ளார். ...
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் வைரலான புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் வைரலான புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் புதிய பாடல் 'ஹர் கர் திரங்கா' வைரலானது 'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது. இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி, “இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ...
என் உடையை தேர்வு செய்வது என் மனைவி தான் – இசையமைப்பாளர் யுவன்

என் உடையை தேர்வு செய்வது என் மனைவி தான் – இசையமைப்பாளர் யுவன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  இசையமைப்பாளர் யுவன் பேசும்போது, சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ரொம்ப நன்றி. நீண்ட நாள் கழித்து இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி. 2D ராஜா சாருக்கும் நன்றி. படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையாவுடன் எனக்கு இது முதல் படம். படம் சிறப்பாக உள்ளது. அதிதி மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது. இதை கார்த்தியிடமும் கூறினேன். யுவன் மற்றும் கார்த்தி என்ற கூட்டணியின் மேஜிக் பையா, பருத்திவீரன், நான் மகான் அல்ல என அனைத்துப் படமும் ஆல்பம் ஹிட். அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது? நாங்கள் ஒரே குடும்பம் போன்று தான். பள்ளி முதல் இதுவரை நாங்கள் ஒன்றாக தான் பழகியுள்ளோம். இப்போது பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்குள்ளது. எங்களுக்குள் இருக்கும் அன்பும், அதை தாண்டிய இறைவனின் அரு...