நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என...
‘ரெட்ட தல’ விமர்சனம் 3/5
படத்தின் பெயருக்கேற்ப அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.ஒருவர் வறுமையில் வாழ்பவர்.இன்னொருவர் பெரும் பணக்காரர்.வறுமையில் வாழும் அருண்விஜய் பணக்காரரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்குப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றிருக்கிறது படம்.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.தோற்றம் மற்றும் உடைகளில் மட்டுமின்றி நடிப்பிலும் நுட்பமான வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டிருக்கும் அருண் விஜய், திரைக்கதை தொய்வு அடையும் இடங்களில் தனது நடிப்பு மூலம் தொய்வில் இருந்து மீட்டு விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், திரைக்கதையில் எந்தவித பாதிப்பையும...
சிறை விமர்சனம் 3.5/5
கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார் அப்துல்ரவூப்..அவரை விசாரணைக்காக வேலூரிலிருந்து சிவகங்கை அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு. இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் சிறை.
காவலர் கதிரவன் வேடத்தில் நடித்திருக்கும் விக்ரம்பிரபு, காவலர் வேலைக்குச் சென்றால் காவலர் தேர்வு, நேர்முகத்தேர்வு என எதுவும் இல்லாமல் உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்குக் காவலராகவே மாறியிருக்கிறார்.தோற்றம் மட்டுமின்றி உடல்மொழி,வசன உச்சரிப்பு ஆகிய எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருக்கிறார்.நடிப்பிலும் வரவேற்புப் பெறுகிறார்.இறுதியில் மற்ற காவலர்களிடம் அவர் பேசும் வசனம் படத்துக்கும் அவருக்கும் பெரும் பல...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர்ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிடும் தலைவர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர...
*"சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் க...