அஜீத் நடிக்கும் புது படத்திற்கு வலிமை என பேர் வைத்திருக்கிறார்கள்.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்த வலிமை படத்தின் துவக்க விழா மிக எளிமையாக நடந்தது.
தொடக்கத்தில் எந்த ஆடம்பரமான நடவடிக்கையும் வேண்டாம் என அஜீத் கேட்டுக் கொண்டதால் எளிமையான முறையில் பூஜை நடைபெற்றது.
மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக பொருந்தினார்.
மேலும் இறுதிச்சுற்று' படத்தில் நடித்தற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது தமிழில் 'ஓ மை கடவுளே', 'பாக்சர்' மற்றும் 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
சட்டம் எல்லாருக்கும் பொதுவானது... வடக்குக்கு ஒரு நீதி... தெற்குக்கு ஒரு நீதியா... பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி
ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம்:
''நான், ஆர்.பி.ரவிச்சந்திரன், தமிழகத்தில், மதுரை மத்திய சிறையில் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நாங்கள் என்றோ ஒருநாள் விடுதலை பெறுவோம் என்று காத்திருக்கிறோம்.
8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சி சாதிக்கப் பாடுபடும் ஒ...
தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் சில படங்கள் திரையுலகை தாண்டி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கு பல உதாரணம் இருந்தாலும் சமீபத்திய பரபரப்புக்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரித்த அசுரன் படம்.
இந்த படத்தில் பஞ்சமி நில மீட்பு குறித்து வெற்றிமாறன் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார்.
இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே திமுக தலைவர் ஸ்டாலின் அந்த அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தி இருந்தார். அப்போது பஞ்சமி நில மீட்பு குறித்த கருத்தை வரவேற்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்து ஒரு பதிவு போட பரபரப்பு அதிகமானது. அதில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமும் பஞ்சமி நிலம்தான் அதையும் உரியவர்களிடம் திருப்பினால் நல்லது என்று ராமதாஸ் பதிவு போட அதற்கு ஸ்டாலின் பதில் சவால் விட்டிருக்கிறார்.
அதில், "மருத்...
நவம்பரில் விஷாலின் ஆக்ஷன் ரிலீஸ்..!
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆக்சன்'.
இந்தப் படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
மேலும் இதில் கபீர்சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகிபாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ‘ஆக்சன்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்....
தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் கைதி..!
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் உருவாகி உள்ளது. படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.
அதே தீபாவளி ரேசில் விஜய் நடித்துள்ள பிகில் படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தசூழலில் கார்த்தியின் கைதி தீபாவளிக்கு முன்பே அதவது 27ம் தேதிக்கு முன்பே 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே ரிலீஸ் செய்ய அறிவிப்பு வெளியாகி விட்டது.
வெள்ளி,சனி இரு நாட்கள் வசூலும் அடுத்த நாள் தீபாவளி வசூலும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கைதி ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து வேறு வழியின்றி விஜய்யின் பிகில் படமும் தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை பிகில் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனால் கைதி வசூலிலும் தனி ஆளாக சக்கை போடு போடும்
ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சையில்...
தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் .
இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி .
வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .
மேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .
இப்படத்தின் பாடல்களின் வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரை...
தர்பாரில் ஆதித்ய அருணாசலமாக மாறிய ரஜினிகாந்த்..!
ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் மெகா ஹிட் அடித்த படம். அந்த படத்தின் பெயரோடு ஆதித்யாவை சேர்த்து கொண்டு தர்பாரில் ரஜினிகாந்த் கேரக்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதுடன் அவர் நடித்த பல கெட்டப்புகள் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது ரஜினிகாந்த் கதாபாத்திர பெயர் ஆதித்ய அருணாசலம் என தெரிய வந்துள்ளது.
ரஜினிகாந்த் தனது போர்ஷன்களை முடித்து கொடுத்து விட்டு இப்போது இமயமலை ரிஷிகேஷ் யாத்திரை சென்று இருக்கிறார்....
பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..!
விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது.
இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார்.
இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார்.
இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
ஸ்ரீகாந்த் நடிக்கும் 'உன் காதல் இருந்தால்' படத்தில் ஒற்றைக் காட்சி தான் - டைரக்டர் ஹாசிம் மரிக்கார்.
கேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் மிகவும் பிரசத்தி பெற்றது.இதுவரை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல நாயகர்கள் நடிப்பில் 16 படங்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த
மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :-
நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரப்பான விளம்பரம் இருக்கிறது. மலையாளத்தில் கதை கரு நன்றாக வந்தாலும் உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் விதமாக சினிமாவிற்கான மிகப்பெரிய சந்தை தமிழ் சினிமாவில் தான் உள...