ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா! பொள்ளாச்சியில் களைகட்டியுள்ள 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவில், பறக்கவிடப்படும் ராட்சத பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தமிழ்நாடு சார்பாக 4 வெப்பக்காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. காற்று குறைந்த காலை நேரத்தில் சுமார் 500 முதல் 800 அடி உயரத்தில் பறக்கவிடப்படும் இந்த பலூன்கள், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வட்டமடிக்கிறது. நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே பறக்கவிடப்படும் இந்த பலூன்களில் பறக்க அதிக கட்டணம் என்பதால், ஸ்பான்சர்கள் மட்டுமே பறக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாலை நேரத்தில், ஆயிரத்து 50...
இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இலங்கை வாங்க - ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு! தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார். வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது....
தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி! தனுஷின் அசுரன் திரைப்படம் 100-வது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படமும் தொடர்ந்தார் போல 2 வாரங்களை கடப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் 100 நாட்கள் ஓடுவது மிகப் பெரிய இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அப்படி சில தமிழ் படங்களே அச்சாதனையை படைத்துள்ளது. ஒரு திரைப்படம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகி 100-வது நாளைத் தொட்டுள்ளது படம் சமீபத்தில் அசுரன் மட்டும் தான். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் -மஞ்சு வாரியர் ஜோடி நடிப்பில் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபி...
ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 1988-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 1. சஞ்சய் அரோரா . 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தற்போது அயல் பணியில் டெல்லியில் இருக்கிறார். 2025-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார். 2. சுனில்குமார் சிங். பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். 3. சுனில் குமார். ஆவின் ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது தமிழகத்தில் உள்ள டிஜிபிக்கள் விவரம்: 1. ஜெ.கே.திரிபாதி - டிஜிபி - சட்டம் ஒழுங்கு (1985 பேட்ச்) ஜூன் 2021 ஓய்வு. 2. ஜா...
ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!* பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இது தங்கத்தின் ஒரு கிராம் விலையை விட அதிகம். கடும் பனிப்பொழிவால் மல்லிகைப் பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ரூபாய் நான்காயிரத்தை தொட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று காக்கிரட்டான் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது....
இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக தகவல்* *பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.* *இதுகுறித்து ராணுவ உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.* *பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு  பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.* *தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இந்திய ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.*...
MGR சுடப்பட்ட தினம் இன்று – நீங்காத நினைவுகள்

MGR சுடப்பட்ட தினம் இன்று – நீங்காத நினைவுகள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இதே ஜனவரி 12ம் நாள். 1967 - எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். துப்பாக்கி குண்டு அவரது தொண்டையில் பாய்ந்தது. இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும். எம் ஆர். ராதா மீது வழக்கு தொடர...
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் – இலங்கை அமைச்சர் திடீர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் – இலங்கை அமைச்சர் திடீர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் - இலங்கை அமைச்சர் திடீர் அறிவிப்பு இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார். குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்ட நிலையில், சில மாதங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது....
ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்... தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்! லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் உலகம் முழுதும் ஏராளமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சத்தமில்லாமல் உலகளவில் ரஜினிகாந்த் ஒரு சாதனையை செய்துள்ளார். பொதுவாக தமிழ் நடிகர்களின் திரைப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்றாலே 100 கோடி கிளப்பில் சேர்ந்து விட்டார்கள் என பெரிதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.119 கோடியை வசூல் செய்து மாபெரும் சாதனையை செய்துள்ளது. அதோடு, இந்திய நடிகர்களிலயே இரண்டு முறை இந்த 100 கோடி சாதனையை செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள...
500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்! கடன் பிரச்சனை தொடர்பான கைது செய்யப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தினரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டதற்காக ரூ.500 கோடி இழப்பீடு வழங்க கேட்டு, பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிசனர் ஏ.கே. விஸ்வநாதன், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,  சென்னை சவுகார்பேட்டை, தங்கச்சாலை தெருவைச்  சேர்ந்த ககன் போத்ரா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை முகுந்த் சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர். சினிமா தயாரிப்பாளர்கள், நட...