ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!
ஸ்ரீகாந்த் நடிக்கும் 'உன் காதல் இருந்தால்' படத்தில் ஒற்றைக் காட்சி தான் - டைரக்டர் ஹாசிம் மரிக்கார்.
கேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் மிகவும் பிரசத்தி பெற்றது.இதுவரை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல நாயகர்கள் நடிப்பில் 16 படங்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த
மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :-
நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரப்பான விளம்பரம் இருக்கிறது. மலையாளத்தில் கதை கரு நன்றாக வந்தாலும் உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் விதமாக சினிமாவிற்கான மிகப்பெரிய சந்தை தமிழ் சினிமாவில் தான் உள...









