பொன்னியின் செல்வன் கதை களம் நகர்வதே தூதுவன் வந்தியத்தேவனின் பார்வையில் தான்!
தமிழகத்தின் பெருமையாக விளங்குவது சோழ பாண்டியர்களின் வரலாறு தான். அதில், சோழர்களின் பெருமையை விவரிக்கும் வகையில், வரலாற்று உண்மைகளுடன் சேர்த்து, 1950களில், கல்கியால் எழுதப்பட்ட ஒரு மாபெரும் கதை தான் பொன்னியின் செல்வன்.
அதனை படமாக்க, பல வருடங்களாக எம்ஜிஆர் உட்பட பல பெரும் திரைப் பிரபலங்கள் இக்கதையை படமாக்க முயற்சி செய்த நிலையில், பல ஆண்டு தமிழ் சினிமா பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் வகையில் பொன்னியின் செல்வன் படம் மணிரதனத்தின் படைப்பாக உருவாகி இருக்கிறது.
பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதில், முக்கிய கதாபாத்திரங்கள் சுமார் 30 இருக்க, ஐஸ்வரியா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, சரத் குமார், ஆர் பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வரியா லக்ஷ்மி, ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளன...









