2021 சட்டமன்ற தேர்தல்… அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல்... அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு
2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கெல்லாம் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கலாம்,
யாரையெல்லாம் விலக்கி வைக்கலாம் என்று பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அதிமுக வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது உறுதி என சொல்லப்படுகிறது.
டெல்டாவை பொறுத்தவரை ஓ.எஸ்.மணியன் முதல்வருக்கு அபிமானமுள்ள நபராக இருக்கிறார். அதே போல் அதிமுக மீது எந்த குற்றச்சாட்டு வைத்தாலும் சளைக்காமல் பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அமைச்சராவது உறுதி என்றே சொல்லப்படுகிறது
ஏனென்றால் எல்லா தரப்பினருக்கும் அவர் முதல்வர் இடத்தில் இருந்து கொண்டு பதில் சொல்லி வருகிறார். அதே போல் சமூக ர...









