செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

மாறன் சகோதரர்களை கடுமையாக சாடிய திமுக எம்.பி!

மாறன் சகோதரர்களை கடுமையாக சாடிய திமுக எம்.பி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன கட்சிகள். அப்படி அதிமுக விளம்பரம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமானதுதான் சன் குழுமம். அதன் முக்கிய சேனலான சன் டிவியில் இப்படியான விளம்பரம் ஒளிபரப்பானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தர்மபுரியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் குரலெழுப்பியுள்ளார். அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட...
ஏசு நாதரை சுட்டது கோட்சேங்க..! ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஏசு நாதரை சுட்டது கோட்சேங்க..! ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் போது, இப்படியான கருத்தைக் கூறினார் அமைச்சர் சீனிவாசன். அவர் பேசுகையில், ‘பொங்கல் பரிசு, 2,500 ரூபாயை அதிமுக அரசு கொடுத்தா தப்புன்றாங்க. முதலமைச்சர் அறிவிச்சாரு. அதை அமைச்சர்கள் செயல்படுத்தி வர்றாங்க. 2,500 ரூபாயோட வேட்டி, சேலைனு எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா மூவாயிரம் ரூபாய் வரும். இது மக்களுக்கான நலத்திட்ட உதவி. இதை நாங்க செஞ்சா திமுக, தப்பு தப்புனு சொல்றாங்க. அவங்க செஞ்சிருந்தா சரியா இருந்திருக்கும். அவங்க இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தா புத்தரோட வாரிசு, ஏசுநாதர் வாரிசுன்னு சொல்லியிருப்பாங்க. இப்ப நாங்க செஞ்சதால ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுனு சொல்வாங்க...
நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயம்

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சுங்கக் கட்டணம் செலுத்தி வந்தன. இதனால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் ஆன்லைனிலேயே சுங்கக்கட்டணத்தை செலுத்தி விட்டு, சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லலாம். இத்தகைய ஃபாஸ்ட் டேக் முறையானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாகவும், எனவே ஃபாஸ்ட் டேக் பதிவு செய்து, அந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்காக சுங்கச்சாவடிகள், ஆன...
மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு

மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு.   தனது சகோதரி மகன் ஜேசன் அபியின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சகோதரி மகனின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட ...
2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2020-ம் ஆண்டு, தான் கடந்து வந்த பாதை மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அமலா பால். அமலா பால் இந்த ஆண்டு சில நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டது போல் தெரிகிறது. சமீபத்தில் தனது கற்றல்களை '2020 - அந்த ஆண்டு' என்ற தலைப்பில் பகிர்ந்துக் கொண்டார். இந்த ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான், என்று அமலா குறிப்பிட்டுள்ளார். "சரியில்லை என்பது சரியில்லை என்று நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்வது சரியில்லை. சரி? குணப்படுத்துதல் ஏற்றுக்கொள்வதில் தான் தொடங்குகிறது. நான் வலியிலிருந்து தப்பவில்லை. அது என்னைப் பாதிக்க அனுமதித்து, துன்பத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார் அமலா. https://twitter.com/Amala_ams/status/1344304475352141824?s=20 வாழ்க்கை தனது பாதையில் வீசிய அன...
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’. கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தை ஜனவரி 1...
லீக்கான வலிமை பட புகைப்படம்!

லீக்கான வலிமை பட புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லீக்கான வலிமை பட புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது  இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ‘Valimaiதிருவிழாஆரம்பம்’ ...
ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் மீண்டும் சென்னையில் தொடங்க முடிவு

ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் மீண்டும் சென்னையில் தொடங்க முடிவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க முடிவு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் அங்கு சென்றார். அவரைத் தொடர்ந்து நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் அங்கு சென்றனர் கொரோனா பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது படக்க...
அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை பட அப்டேட்?

அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை பட அப்டேட்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை படத்தின் அப்டேட் பிகில் படத்தில் வரும் கால்பந்து வீராங்கனைகளில் கேப்டனாக வரும் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார் அமிர்தா ஐயர். தமிழ் சினிமாவில் தெனாலிராமன் லிங்கா போக்கிரி ராஜா தெறி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன்பின் படைவீரன் காளி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் நடித்துள்ளார். இன்று காலை முதல் வலிமை படத்தின் அப்டேட் இல்லாததால் டுவிட்டரில் டிரெண்ட் பண்ணிக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு ஒரு பாடல் காட்சியை படம் பிடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வராத நிலையில் அமிர்தா ஐயர் இவ்வாறு லீக் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளார்கள் அதுபோல அவர் வெளியிட்டுள்ள வீடி...
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட,  ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் தனித்துவிடப்படும்  பாமக!

திமுகவின் கதவுகள் அடைக்கப்பட,  ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் தனித்துவிடப்படும் பாமக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட,  ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் பாமக தனித்துவிடப்படும் நிலை பாமக சிறப்புப் பொதுக்குழுவில் அதிமுகவுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு முடிவுகள் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், தொகுதி பேரத்தை அதிகப்படுத்த தனித்துப்போட்டி என்று சில மிரட்டல் பேச்சுக்கள் மட்டும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுகவின் கதவுகள் பாமகவுக்கு அடைக்கப்பட்டுவிட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பும் தமிழக அரசியல் களத்தில் இல்லை. இந்த நிலையில் அதிமுக அணியில் சேருவதைத் தவிர பாமகவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. சிறப்புப் பொதுக்குழுவில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லையென்றும் கூட்டணிப் பேச்சுகளை நடத்த பாமக தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறை...