மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்!
தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் 1977ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியை எப்படியும் வீழ்த்தி பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ளன.
2016ம் ஆண்டு நடந்த சட்ட...









