‘நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்’ – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
தொலைக்காட்சித் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி பிறகு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் 2012-இல் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன்பின் எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, டான் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர் மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
இதனை குறித்து விரிவான விளக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்.
இந்...









