செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!

காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள், காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளார். அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார். கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபுவின் மகள், “நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள். இவர் சதீஷ் நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம். 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர். திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ...
Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  Ukraine War - உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!   https://youtu.be/vIycmx18WZE    
விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்துமலருக்கும் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!

விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்துமலருக்கும் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் பாலாவுக்கும், அவர் மனைவி முத்துமலருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. 2004ம் ஆண்டு பாலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உறவுக்கார பெண்ணான முத்துமலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த சூழலில் திடீரென பாலாவுக்கும், முத்து மலருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இயக்குனர் பாலாவும், முத்துமலரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தார்கள். இதற்கிடையில் முத்துமலர் யாருக்கும் சொல்லாமல் முக்கியமான அரசியல் பிரபலத்தின் உறவினரோடு சிங்கப்பூர் சொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் இயக்குனர் பாலா புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தது. டிஜிபியை ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பாலா பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவி...
சாரல் மழையால் சாலையில் வழுக்கி சரிந்த கோயில் தேர்- லேசான காயத்துடன் உயிர் தப்பிய பூசாரி!

சாரல் மழையால் சாலையில் வழுக்கி சரிந்த கோயில் தேர்- லேசான காயத்துடன் உயிர் தப்பிய பூசாரி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் அருள்மிகு பெரியநாயகி என்கிற அங்காளம்மன் கோயில் இருக்குது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை தொடர்ந்து மாசி தேரோட்டமும் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த மார்ச் இரண்டாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, அலங்கிரி, வீரமங்கலம், செம்பியன்மாதேவி, புகைப்பட்டி, வெள்ளையூர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இடத்துக்கு சென்றிருந்தனர். காலை 10:30 மணிக்கு திருத்தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பின்பு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சக்த...
பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!

பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்! நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார். அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய். திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக  தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய். அதிலும், அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், ...
பூனம் பஜ்வாவுடன் இணைந்த நடிகர் நட்டி!

பூனம் பஜ்வாவுடன் இணைந்த நடிகர் நட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு, சண்டி முனி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நட்டி (எ) நட்ராஜ். இவர் கடைசியாக நடித்த கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் தற்போது சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை பூனம் பஜ்வாவுடன் சேர்ந்து புதிய படமொன்றில் நடித்துள்ளார். குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நட்டி பூனம் பஜ்வாவுடன் இணைந்து ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப...
கவின்னின் அடுத்த பட கதாநாயகி  பீஸ்ட் பட நடிகை!

கவின்னின் அடுத்த பட கதாநாயகி பீஸ்ட் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அவர் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து அடுத்த படத்தில் கவின் நடிக்கவுள்ளார். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப...
பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. https://twitter.com/hegdepooja/status/1500684502720389125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ct...
ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. தற்போது ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ...
#ukraine war – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்!

#ukraine war – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷியா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், ரஷியாவில் எங்களது சேவையை நிறுத்தியுள்ளோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான நெட் பிலிக்ஸ் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது ரஷியாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் டிக்டோக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது....