வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

HOME SLIDER

சோம்நாத் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்

சோம்நாத் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கி வந்து ஆட்சியை கைப்பற்ற இயலாமல் தோல்வி கண்டது. மொத்தம் காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியை பிடித்த பா.ஜனதாவுக்கு 99 இடங்கள் கிடைத்தன. இந்த நிலையில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மண்டல வாரியாக ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று குஜராத் மாநிலம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கேசோத் விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேர்தல் நடப்பதற்கு முன்பாகவும் ராகுல்காந்தி இந்த சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது நினைவு கூறத்தக்கது...
சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ஆகையால், சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந்த...
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தவிர திமுக,பாஜக உட்பட 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தவிர திமுக,பாஜக உட்பட 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அடுத்த இடத்தை பிடித்த அதிமுகவால் அடுத்தடுத்த சுற்றுகளில் மீண்டும் முன்னேறி வரமுடியவில்லை. டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் நீடித்த மதுசூதனன் எட்டாத அளவு வித்தியாசத்தில் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.  14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலு...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர். கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் விஸ்வரூபம் எடுத்தது போன்று இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளித்தன. பணப்பட்டுவாடா புகார் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ...
காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனங்களையும் அவர்கள் பொழுதுகளையும் களவாடும் ‘களவாடிய பொழுதுகள்’ – விமர்சனம்

காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனங்களையும் அவர்கள் பொழுதுகளையும் களவாடும் ‘களவாடிய பொழுதுகள்’ – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
  காதலித்தவர்கள் மட்டுமல்ல காதலிப்பவர்கள் மனங்களையும் அவர்கள் பொழுதுகளையும் களவாடும் ‘களவாடிய பொழுதுகள்’ - விமர்சனம் காதலித்தவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சேர முடியாமல் பிரிந்து வேறு இணையோடு வாழும்போது தங்கள் காதல் ஜோடி இப்போது எப்படி இருப்பார்களோ என எண்ணுவதுண்டு.அன்று நேசித்தவர்களை திடீரென நேரில் பார்த்தால் காதல் உள்ளம் எப்படி இருக்கும் ? மீண்டும் பழைய நினைவுகளில் சிக்கி சின்னபின்னப்படும் அந்த வலியை உணராதவர்கள் வெகு குறைவு... . கடந்து போன- தொலைந்து போன தங்களின் வாழ்க்கையை , அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று ஏங்குவதுண்டு. ஆனால் பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் போது நினைத்த அளவுக்கு சகஜமாக சந்தோஷமாக இருக்க முடியுமா? அப்படித்தான் இந்தக் காதலர்களும் சந்திக்கிறார்கள். அதன்பின் அவர்கள் இலகுவாக இருக்க முடியவில்லை .தங்கள் காதல் உணர்வுகள் மீண்டும் கிளர்ந்து ...
நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்

நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் - விமர்சனம் ஆக்‌ஷன் ஹீரோ ஆக தன்னை முன்னிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார் சந்தானம். விமர்சனத்தை பார்ப்பதற்கு முன் ஹீரோ ஆக நிலை நிறுத்தி கொள்ள சந்தானம் ரொம்பவே மெனக்கொட்டிருக்கிறார். உடல் அமைப்பிலும், நடனத்திலும், ஆக்‌ஷனிலும் நடிப்பிலும்... ஆனால் அவரின் வழக்கமான காமெடி நையாண்டி முத்திரை பல இடங்களில் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனி கதை... சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார் சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் வி...
ஊழல் புகாரில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்: டெல்லி ஐகோர்ட் அதிரடி

ஊழல் புகாரில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்: டெல்லி ஐகோர்ட் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆதாரங்களும் டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. லஞ்ச ஊழல் புகாரில் டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து டெல்லி ஐகோர்ட்  உத்தரவிட்டது இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சாட்டையை சுழற்றிய டெல்லி ஐகோர்ட், துவாரகா மாவட்ட கூடுதல் நீதிபதி ஜிதேந்தர் மிஷ்ரா, நவீன் அரோரா (சிறப்பு நீதிபதி, மின்சாரம்) ஆகியோரை  பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது...
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த்  கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். சந்திப்பின்  போது அவர் பேச்சிய பேச்சு  பெரும்பரபரப்பையும் பலவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின. கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வருகிற 26 ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள்  தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து பு...
இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான்(51) 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக்கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். அக்ஷய் குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட்  சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முறையே 4, 5 வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 98.25 கோடி ரூபாயும், 82.50 கோ...
கனிமொழி, ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்றார்..!

கனிமொழி, ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்றார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினர்.  தங்கை கனிமொழியை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வரவேற்றார்  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆர். ராசா , கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார். வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்பினர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  சென்னை திரும்பிய கனிமொழியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின். ஆர்.ராசா மற்றும் கனிமொழி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுகவினர...