புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரம் சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசை மறைமுகமாக எதிர்த்த ரஜினி..! நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் இன்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது: தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா. அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது. கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 நிச்சய...
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?! லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி ...
பாலா உதவியாளர் இயக்கும் கல்லூரி விடுதிகளின் மறு பக்கமான “மயூரன்”..!

பாலா உதவியாளர் இயக்கும் கல்லூரி விடுதிகளின் மறு பக்கமான “மயூரன்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பாலா உதவியாளர் இயக்கும் கல்லூரி விடுதிகளின் மறு பக்கமான "மயூரன்"..! கல்லூரிகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஏராளமானப் படங்கள் வெளியானாலும், கல்லூரி விடுதிகளை மையப்படுத்திய படம் என்பது அரிதான ஒன்று தான். அந்த அகையில், கல்லூரி விடுதிகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘மயூரன்’ கல்லூரி விடுதிகளின் மற்றொரு பக்கத்தை காட்டும் படமாகவும் உருவாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் ’நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தா சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார். பி.எப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகிய நான்கு பேர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது உண்மை கதை இல்லை என்றாலும், இயக்குநர் நந்தா சுப்பராயன், தனது வாழ்வில் சந்தித்த சில விடுதி அனுபவங்களை வைத்து இப்படத்தின் ...
வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வெனிஸ் நகருக்கு சுற்றுலா போன இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி வெளியேற்றம்..! இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த ஜோடி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சுற்றுலா சென்றிருந்தது. அந்த ஜோடி அங்குள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்துக்கொண்டிருந்தனர். இப்படி பொது இடத்தில் நடந்து கொள்வது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும். இதை பார்த்த சிலர் அங்குள்ள மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து காபி குடித்த ஜோடியை பிடித்து அதிகாரிகள் 853 பவுண்ட் அபராதம் (சுமார் ரூ.75 ஆயிரம்) விதித்தனர். அத்துடன் அவர்களை உடனடியாக அந்த நகரில் இருந்தும் வெளியேற்றினர். கா...
திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க... தேவஸ்தானம் புது முடிவு..! 10 ஆயிரம் நன்கொடை கொடுத்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைக்க புதிதாக உருவாக்கப்பட “ஸ்ரீ வாணி” டிரஸ்டுக்கு ரூ. 10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கப்படும் என ஆந்திராவில் புதிதாக அமைந்த ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், டிரஸ்ட்டின் நன்கொடையை அதிகரிக்கவும் இந்த திட்டம் கொண்டு வர...
ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூலை 23ல் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ் விஜய் இரட்டை வேஷத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆவதற்கு முன்பு இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. படக்குழு ஷாக் ஆனதோ இல்லையோ விஜய் ரசிகர்களை குஷி படுத்தியது இந்த பாடல். இந்த நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் சிங்கிள் வரும் ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகும் என பட நிறுவனம் அறிவித்து உள்ளது. படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குனர் அட்லி பரபரப்பாக பணியாற்றி வருகிறார்....
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..? மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எதிர்க் கட்சிகளை தாண்டி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக சூர்யா மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு நிதி தரும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் புதிய கல்வி கொள்கையை கடுமையாக சூர்யா விமர்சித்தார். அதோடு, பல கிராமத்தில் பள்ளிக்கூடங்களில் அடிப்படை விஷயங்களே இல்லை இதில் புதிய கல்வி கொள்கை ரொம்ப அவசியமா என பொருள் படும் வகையில் கடும் வாதத்தை முன் வைத்தார். அதற்கு முன் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள அவலம் தோலுரிக்கப் பட்டிருந்தது. அந்த விழாவிலும் நீட் தமிழகத்தில் தேவையா என கேள்வி எழுப்பி இருந்தார் ஜோதிகா. இ...
டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் பெட்ரோமாக்ஸ் தமன்னா ஒரு திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வருகிறார். தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது....
தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..! மாமனார் ரஜினிக்கு பேட்ட படம் மூலமாக ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் மருமகன் தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தது. ஆனால் அதற்கு முன் ரஜினி படம் தொடங்கியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்....