நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி வரை அவகாசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி வரை அவகாசம்
மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் மட்டுமே மருத்துவ படிப்பை நிர்ணயிப்பதால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுத மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள்
இதற்காக சிறப்பு வகுப்புகள், பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மேலும் தனியார் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் கடந்த ஆண்டு நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு மருத்துவ கல்லூரிகளும் தாமதமாக திறக்கப்பட்டன.
இந்த வருடம் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகின்றன. அதனால் நீட் தேர்வையும் குறித்த காலத்திற்குள் நடத்தி முடித்து மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க வேண...









