செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை (24-ந் தேதி) நடக்கிறது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதே திறமையை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார...
15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!

15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அவருடைய சினிமா பயணம் தொடங்கி 15 வருடம் ஆகியிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். இவருடன் இணைந்து பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருடைய சினிமா பயணத்தில் இவருக்கு பருத்திவீரன் முக்கியமாக திரைப்படமாக அமைந்தது. பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.   அதன்பின் அவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இன்று (23-02-2022) கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கார்த்தி அவருடைய சமூக வலைத...
பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்!

பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
திடீரென பதவியை ராஜினாமா செய்த செல்வமணி! வருத்தம் தெரிவித்த பாக்யராஜ்!!

திடீரென பதவியை ராஜினாமா செய்த செல்வமணி! வருத்தம் தெரிவித்த பாக்யராஜ்!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    பதவியை ராஜினாமா செய்த செல்வமணி! தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இமயம் அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், புதுவசந்தம் அணி சார்பில் இயக்குனர் செல்வமணி தலைமையில் ஒர் அணியும் களத்தில் இருக்கிறது. இதில் பாக்யராஜ் அணிக்கு பாரதிராஜா ஆதரவு தெரிவித்திருக்கிறார். செல்வமணிக்கு விக்ரமன் ஆதரவு தெரிவித்திருக்கிறார். பாக்யராஜை பொய்யர் என செல்வமணியும், செல்வமணியை போர்ஜெரி பேர்வழி என பாக்யராஜும் ஒருவரை ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளோடு பொது மேடைகளில் குற்றம்சுமத்தி பேசி வருகிறார்கள். செல்வமணி தமிழ் சினிமாவில் பல சங்கங்களில் பதவியில் இருக்கிறார். அதில் குறிப்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கிறார். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படக்கதை திருட்டுக்கதை என புகார் எழுந...
மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைப்பற்றி உள்ளது. அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய் மக்கள் இயக்கம். இந்த வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். பொன்னேரி நகராட்சி 16 வது வார்டிற்கு நடைபெற்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சிலம்பரசன் என்பவரின் மனைவி மணிமாலா சுயேட்சையாக போட்டியிட்டு  337 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணி புரட்சிபாரதம் இரட்டை இலை சின்னத்தில் லதா என்பவர் 142 வாக்குகளுடன் இரண்டாம் இடமும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வினோபா 140 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்....
ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய அஜீத்தின் வலிமை!

ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய அஜீத்தின் வலிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வலிமை திரைப்படம் குறித்து ஒரு சின்ன அப்டேட் கிடைக்காதா? என்று பல மாதங்களாக ஏங்கித் தவித்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு சமீப நாட்களாக போதும் போதும் என்கிற அளவிலான ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள தேதி தான் - பிப்ரவரி 24. அப்படியாக இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் முன்பதிவுகள் படுவேகமாக நடந்து வரும் நிலைப்பாட்டில் வலிமை திரைப்பட ரிலீஸ் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. அது வலிமை திரைப்படமானது மொத்தம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் ஆகும். போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது வலிமை திரைப்படம் ...
பாக்யராஜ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் பத்திரிகையாளர்கள் மீது பாயும் செல்வமணி!

பாக்யராஜ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் பத்திரிகையாளர்கள் மீது பாயும் செல்வமணி!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
    பாக்யராஜ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் பத்திரிகையாளர்கள் மீது பாயும் செல்வமணி!   https://youtu.be/YKv_g4PfFaU
உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன....
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை சென்னை உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள பிக்பாஸ் பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார். ரசிகர்களின் உற்சாக ஆராவாரத்திற்கிடையே முகென் ராய் நடனமாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா இப்பாடலின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். முன்னணி மால் ஒன்றில் தனது மனதுக்கு பிடித்தப் பெண்ணை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்குள் உருவாகும் உணர்வுகளின் கலவை தான் ‘மயக்கிறியே’. அனிவீ இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். ஜிம்மி ரூத் இந்த இசைக் காணொலியை இயக்கியுள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவை கையாள, அப்சர் நடனம் அமைத்துள்ளார். இப்பாடலுக்கு யூடியூப்பில்...
தேர்தலில் தோல்வியடைந்த கானா பாலா!

தேர்தலில் தோல்வியடைந்த கானா பாலா!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல்
  தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்றிலும் தி.மு.க. வெற்றிகளை குவித்து வருகிறது. இதை தி.மு.க கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கானா பாலா, சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த வார்டில் கானா பாலா 6095 வாக்குகள் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சியை சேர்ந்தவர் சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்....