வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics
  5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிப்23ல் ஆலோசனை எனத் தகவல். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக செவ்வாயன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது....
நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின் அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது....
முத்தக் காட்சியில் நடிக்க மனைவியின் அனுமதி ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்!

முத்தக் காட்சியில் நடிக்க மனைவியின் அனுமதி ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: 'வேட்டை நாய்' பட  விழாவில் ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக் நூறு படங்களில் நடித்தும் ஒரு லிப்லாக் முத்தம் கூட கொடுக்கவில்லை: 'வேட்டை நாய் விழாவில் ஏக்கத்தை வெளிப்படுத்திய ராம்கி சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்' ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனிய...
பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் “உன் பார்வையில்”  ரொமான்ஸ் திரில்லர்!

பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் “உன் பார்வையில்”  ரொமான்ஸ் திரில்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன் பார்வையில்”  ரொமான்ஸ் திரில்லர் திரைப்படம் ! பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். “உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal  போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும். இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக...
‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா!

‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா. சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா. கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:- “சாம்பியன்” படத்தில்  என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும். நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ...
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா”

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு ! தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது 2 ஜூலை 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Dharma Productions சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, Kash Entertainment நிறுவனம் ...
ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
    ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு "வாய்ஸ்" வருமா? தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது நண்பரும் நடிகருமான ரஜனிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் இல்லை என கூறப்பட்ட நிலையில் ரஜினியை திடீரென கமல் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கமல் எந்த கூட்டணியிலும் இணையவில்லை. ரஜினியை சந்தித்து தனது கட்சிக்கு வாய்ஸ் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது....
ஜோதிமணி MP திடீர் கைது!

ஜோதிமணி MP திடீர் கைது!

HOME SLIDER, NEWS, politics
    கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 70 ஆண்டுகள் பழமையான சிலையை அகற்றிவிட்டு, முதல்வர் புதிதாக திறப்பதற்காக அவசரகதியில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்....
“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    "சக்ரா" விஷாலுக்கு இன்னொரு விருதா - கோடங்கி விமர்சனம் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் சந்தி சிரிக்கும் படம் தான் சக்ரா. இராணுவ அதிகாரியாக விஷால், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். இருவரும் காதலர்கள். ஒரு சின்ன சம்பவத்தால் காதலில் விரிசல். சுதந்திர தினத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தொடர் கொள்ளை நடக்கிறது. 50 வீடுகளில் துப்பாக்கி முனையில் நடக்கும் கொள்ளையில் விஷாலின் பாட்டி வீடும் ஒன்று. அங்கிருந்த விஷாலின் அப்பா வாங்கிய சக்ரா விருதையும் கொள்ளையர்கள் எடுத்து செல்கிறார்கள். அந்த வழக்கை ஷ்ரத்தா விசாரிக்கிறார். அவரோடு விஷாலும் கை கோர்க்கிறார். கொள்ளை அடித்தவர்கள் யார்? அந்த சக்ரா விருது திரும்ப கிடைத்ததா? இதுதான் கதை. இன்னொரு நாயகியாக ரெஜினா கசண்ட்ரா பின் பாதியில் எண்ட்ரி கொடுக்கிறார். வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெடுகிறார்....
நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘மாறா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நடிகராக மட்டுமல்லாது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார் மாதவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகி வ...