செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை!

தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது அவர் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் அவருடைய...
இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு!

இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இதில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘ஸ்கைலேப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த அறிவிப...
‘ வர்ஜினா நீங்கள்?’ – கேள்விக்கேட்டு  நடிகையை அதிர வைத்த ரசிகர்  !

‘ வர்ஜினா நீங்கள்?’ – கேள்விக்கேட்டு நடிகையை அதிர வைத்த ரசிகர் !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார். அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார். இ...
”மகான் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது சொல்கிறார்” துருவ் விக்ரம்!

”மகான் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது சொல்கிறார்” துருவ் விக்ரம்!

HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  ”மகான் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது சொல்கிறார்” துருவ் விக்ரம்!   https://youtu.be/aLWZxvcwdpQ
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஐ.சி.சி. உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1000 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....
குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

HOME SLIDER, sports, உலக செய்திகள், விளையாட்டு செய்திகள்
  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடக்கும் இந்த போட்டியில் முதலாவது தங்கப்பதக்தக்தை நார்வே தட்டிச் சென்றது. பெண்களுக்கான 15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் (காலில் சக்கர பலகை கட்டிக்கொண்டு ஐஸ்கட்டி பாதையில் சறுக்கியும், கம்பு ஊன்றியும் ஓடுவது) நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரஷிய வீராங்கனை நதாலியா நேப்ரியேவா வெள்ளிப்பதக்கம் பெற்றார். 33 வயதான ஜோஹாக் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 1½ ஆண்டு கால தடை காரணமாக 2018-ம்ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது....
19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  19 வயது உலக கிரிக்கெட் கோப்பையில் இந்தியா சாம்பியன்! இறுதிப்போட்டியில் இங்கிலாந்து எதிரான 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய U19 அணி. 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது   19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த...
மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா பரவலை தடுக்க மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான புதிய வகை மாஸ்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கோஸ்க் (Kosk) என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஆகிய நடமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மாஸ்க்கை பொறுத்தவரை சர்ஜிக்கல் மாஸ்க், என்95 மாஸ்க் என பல்வேறு மாஸ்க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல, தங்கத்திலான மாஸ்க், விதவிதமான ஃபேன்சி மாஸ்க்களும் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று, மூக்கை மற்றும் மறைக்கும்வகையிலான புதிய வகையான மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கோஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு ...
பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது. இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை என்றாலும் நடிகர் விஜய் செயல்பாடுகளும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகளும் வருங்கால அரசியல் பாதைக்கு விஜய் தயார் ஆவதை சொல்லாமல் சில்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்போது நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்றிருந்தனர். அவர்கலை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து வைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்த்க்கது. அதைப் போலவே,  நடைபெற உல்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை கைப்பற்றும் என எதிர...
திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.