நான் அவளை சந்தித்த போது கோடங்கி விமர்சனம்
தமிழ் சினிமாவில் இயல்பான கதைகளை படமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிலும் வலியோடு நிஜத்தை சொல்லும் படங்கள் வருவது நின்றே விட்டது என்றே சொல்லலாம்.
ஆனால் அத்திப் பூத்தார் போல 96 படம் வந்து மெகா ஹிட் ஆனது. அப்படி ஒரு ஹிட் வரிசையில் சேரும் கதை கொண்ட படம்தான் நான் அவளை சந்தித்த போது.
எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள "நான் அவளை சந்தித்த போது" படமும் 96ல் நடந்த ஒரு உண்மையான கதை என சொல்லும் போதே படம் பார்க்கத் தொடங்கிய எல்லாரும் கண்டிப்பாக நிமிர்ந்து உட்காருவார்கள்.
இயக்குனர் ஆன பிறகுதான் கல்யாணம் என வைராக்கியத்தோடு இருக்கும் ஹீரோ வழி தெரியாமல் தவிக்கும் ஹீரோயினை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்.
அங்கே ஹீரோவை தவறாக புரிந்து கொள்ளும் ஹீரோயின் வீட்டில் திடீர் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.
அதன் பின் ஹீரோவின் இயக்குனர் கனவு என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லி படம் பார்க...









