திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது!
திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கருணா கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக கம் பம், பட்டுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட சிறு நகரங்களில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தியுள்ளோம். 6-வது ஆண்டு திரைப்பட விழா திருவண்ணா மலையில் 16-ம் தேதி (இன்று) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது.
திரைப்பட விழாவை 16-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மலை ஆட்சியர் க.சு.கந்தசாமி தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., இயக்கு நர் கோபி நயினார், திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், நடிகை ஷீலா உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர். சமீபத்தில் மறைந்த திரை ஆளுமைகளான மகேந் திரன், கிரிஷ் கர்னாட், மிருணாள் செ...









