ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (21-ந் தேதி) இடைத்தேர்தல் நடக்கிறது. மதுசூதனன் (அ.தி.மு.க.), மருதுகணேஷ் (தி.மு.க. ), கரு.நாகராஜன் (பா.ஜனதா), தினகரன் (சசிகலா அணி), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க் கள் தீவிர பிரசாரம் செய்தனர்.
தொகுதி முழுக்க வீதி வீதியாக சென்று அவர்கள் வாக்கு சேகரித்தனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லியும், அவர் அறிவித்த திட்டங்களை ஆர்.கே. நகர் தொகுதியில் நிறைவேற்றிடவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தி.மு.க. வேட்பாளர்...









