வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!
வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!
உலக அளவில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் இந்தியா கடந்த மே மாதம் 11வது இடத்தில் இருந்தது. நாடுமுழுதும் வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக இருந்ததால் 11வது இடத்தில் இருந்த இந்தியா நேற்றுமுன்தினம்வரை 4ம் இடத்திற்கு முன்னேறியது.
இந்த சூழலில், நேற்று வைரஸ் பரவலின் வேகம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததாலும் 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவில் வைரஸ் பரவல் மெல்ல கட்டுக்குள் வருவதாலும் இந்தியா 3வது இடத்திற்கு சென்றது. பிரேசில் 2ம் இடத்திலும், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் நீடிக்கிறது.
ரஷ்யாவில் 681251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21492 பேர் புதிதாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இ...








