சாத்தான்குளம் விவகாரம்… முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
சாத்தான்குளம் வழக்கு நேர்மையாக நடக்க உள்துறையை முதல்வரிடம் இருந்து மாற்ற வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதியமனு!
சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர மரண வழக்கு விசாரணை முடியும் வரை உள்துறை பொறுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து வேறு அமைச்சருக்கு மாற்றி உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அப்பா மகன் மரண வழக்கு நாடுமுழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் புகார் கிளம்பிய முதல் நாளில் இருந்தே தவறு செய்த போலீஸ் குற்றவாளிகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்படியிருந்த போதும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்ததால் வழக்கின் வேகம் அதிகரித்தது. அதன் காரணமாக பல அதிரடி திருப்பங்கள...









