வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்!
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ஆம் தேதி வெளியானது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்ததால் இப்படம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
இதில் ராம்சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார்.
ஆலியா பட்டின் கதாப்பாத்திரம் பெரும் அளவிற்கு பேசப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர், ஆனால் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டுடைய கதாப்பாத்திரம் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றதது.
இதனால் அதிருப்தியடைந்த ஆலியா பட், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான பகிர்ந்திருந்த அனைத்து ப...








