‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்
'சிங்கா': இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் ஷ்ரிதா ராவ் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்
இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 'சிங்கா' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
'உலக நாயகன்' கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான கே.சி. ரவிதேவன் இயக்கும் 'சிங்கா' திரைப்படத்தில் 'லெனின் பாண்டியன்', பிரபு சாலமன் இயக்கத்தில் 'கும்கி 2' உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார்.
...









