வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்! லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படத்தை பகுதி பகுதியாக வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறி ஒரு ஆடியோவும் உலா வந்தது. அந்த செயலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பிரச்சனையாக மதுரையில் செயல்படும் சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் என்ற கேபிள் சேனலில் எந்த அனுமதியும் பெறாமல் தர்பார் திரைப்படம் திருட்டுத்தனமாக கடந்த 12ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இது தமிழ...
இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டி போட்டு நடித்த விலா நோக சிரிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது இந்த அருமையான காட்சி மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் தயாரித்துள்ள "காவி ஆவி நடுவுல தேவி" படத்தில் இடம் பெறுகிறது. யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என நான்கு மொழிக்கு நான்கு பேர் அவர் ஜோடியாக நடித்துள்ளனர். இதில்லாமல் செம்மையான புதுமுக கவர்ச்சி நடிகையுடன் , " இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே மந்திரி கெட்டதும் பிகராலே ராஜதந்திரி கெட்டதும் பிகராலே" என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். உச்சக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என நிறைய பேர...
யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகி பாபுவை வச்சு செஞ்ச சந்தானம் " டகால்டி " இம்மாதம் 31 ரிலீஸ் 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள " டகால்டி " தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்...
எனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே எனக்கு முதல் கடவுள் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் உருக்கம்

எனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே எனக்கு முதல் கடவுள் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் உருக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் 101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கி பேசிய விஜயகாந்த், தனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமக்கு முதல் கடவுள் என்றார். குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஆதரித்து பேசி வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தியா இந்துக்கள் நாடு, சிறுபான்மையினர் எங்களுடன் இணைந்து வாழ்கின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி ஈட்டியிருப்பதாகவும், அதனால் தமிழக அரசியலில் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார். அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற கட்ச...
பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா! பொள்ளாச்சியில் களைகட்டியுள்ள 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவில், பறக்கவிடப்படும் ராட்சத பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தமிழ்நாடு சார்பாக 4 வெப்பக்காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. காற்று குறைந்த காலை நேரத்தில் சுமார் 500 முதல் 800 அடி உயரத்தில் பறக்கவிடப்படும் இந்த பலூன்கள், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வட்டமடிக்கிறது. நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே பறக்கவிடப்படும் இந்த பலூன்களில் பறக்க அதிக கட்டணம் என்பதால், ஸ்பான்சர்கள் மட்டுமே பறக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாலை நேரத்தில், ஆயிரத்து 50...
இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இலங்கை வாங்க - ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு! தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார். வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது....
தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி! தனுஷின் அசுரன் திரைப்படம் 100-வது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படமும் தொடர்ந்தார் போல 2 வாரங்களை கடப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் 100 நாட்கள் ஓடுவது மிகப் பெரிய இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அப்படி சில தமிழ் படங்களே அச்சாதனையை படைத்துள்ளது. ஒரு திரைப்படம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகி 100-வது நாளைத் தொட்டுள்ளது படம் சமீபத்தில் அசுரன் மட்டும் தான். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் -மஞ்சு வாரியர் ஜோடி நடிப்பில் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபி...
ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 1988-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 1. சஞ்சய் அரோரா . 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தற்போது அயல் பணியில் டெல்லியில் இருக்கிறார். 2025-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார். 2. சுனில்குமார் சிங். பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். 3. சுனில் குமார். ஆவின் ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது தமிழகத்தில் உள்ள டிஜிபிக்கள் விவரம்: 1. ஜெ.கே.திரிபாதி - டிஜிபி - சட்டம் ஒழுங்கு (1985 பேட்ச்) ஜூன் 2021 ஓய்வு. 2. ஜா...
ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!* பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இது தங்கத்தின் ஒரு கிராம் விலையை விட அதிகம். கடும் பனிப்பொழிவால் மல்லிகைப் பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ரூபாய் நான்காயிரத்தை தொட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று காக்கிரட்டான் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது....
இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக தகவல்* *பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.* *இதுகுறித்து ராணுவ உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.* *பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு  பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.* *தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இந்திய ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.*...