கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது
2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது.
கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்தார்.
ஆளுநா் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்:
கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் 1000க்கு 917 என்பதில் இருந்து 943 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் 43.9% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விடஅ திகம்.
2019 - 20ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறி...









