வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்…!

ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்...! பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்போது “சூர்யவன்ஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கி கொண்டிருப்பவர் பாலிவுட்டின் வெற்றி இயக்குனர் ரோஹித் ஷெட்டி. ”சூர்யவன்ஷி” படத்தின் படபிடிப்பு தீவிரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில் நடிகர் அக்ஷய் குமார்,அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஹெலிகாப்டரின் கீழே உள்ள கம்பியில் அக்‌ஷய் குமார் தலை கீழாக தொங்கி கொண்டு தரைக்கு கொஞ்சம் உயரத்தில் ஹெலிகாப்டர் பறப்பது போல அந்த படம் உள்ளது. இதையாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இந்த படம் வைரலாகி வருகிறது....
கங்கையை தூய்மைபடுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் கெடு..!

கங்கையை தூய்மைபடுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் கெடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கங்கையை தூய்மைபடுத்த மோடிக்கு கெடுவிதித்த சாதுக்கள் இயக்கம்..! ‘மாத்ரி சதன்‘ என்ற சமூக-ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த பிரமச்சாரி ஆத்மபோதானந்தா என்ற சாது கங்கை ஆற்றை தூய்மை படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து 194 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். கடந்த மாதம் 4-ந் தேதி, மத்திய மோடி அரசு கண்டிப்பாக தூய்மை படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததன்பேரில், அந்த சாது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். இந்நிலையில், அதே இயக்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “கங்கையை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை ஜூன் 13-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால், அடுத்த கட்ட போராட்டத்துக்கான திட்டத்தை வகுப்போம்“ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் சாதுக்கள...
மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்புவுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த மாநாடு... "மன்மதன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு இப்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அமெரிக்கா சென்று உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு வந்தார். இந்த படக்குழு வரும் 20ம் தேதி மலேசியா செல்கிறார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவருமே தங்கள் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்....
ரோஹித் சர்மா சத்தால் வெற்றி பெற்ற இந்தியா

ரோஹித் சர்மா சத்தால் வெற்றி பெற்ற இந்தியா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில் நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசியது. 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 228 என் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர், தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார் இதன் காரணமாக இந்தியா வெற்றி பெற்றது....
சசி குமாருக்கு வில்லியாக ஒரு நடிகை…!

சசி குமாருக்கு வில்லியாக ஒரு நடிகை…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்த நிலையில் வித்தியாவை கேமராமேன் அறிமுகபடுத்த... இப்போது சசிகுமாரின் வில்லியாகி இருக்கிறார் வித்யா....
விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி..! நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. நிர்வாகிகளில் சின்ன மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு ஜெயம் ரவி, உதயா போட்டியிடுகிறார்கள். தேர்தல் 23ம் தேதி நடை பெற உள்ளதால் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது....
மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி - தர்பார் அப்டேட் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் பட இரண்டாம் கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. போலீஸ் காரில் இருந்து ரஜினி இறங்கி செல்லும் வீடியோ ஒன்று லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இன்னும் ஒரு சில தினங்களில் படமாக்க இருக்கிறார்கள். மும்பையில் மக்கள் கூடும் சந்தையில் இந்த சண்டைக் காட்சி எடுக்க திட்டம். ஏற்கனவே செட்டுக்குள் எடுக்கும் கட்சிகளின் வீடியோ, படங்கள் அடிக்கடி லீக் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மக்கள் கூடும் இடத்தில் என்றால் இன்னும் சொல்ல வேண்டாம். இருந்த போதும் பல பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க இருக்கிறார் இயக்குனர். இந்த சண்டைக் காட்சியை ராம்-லக்‌ஷ்மன் என்று அழைக்கப்படும் இரட்டை சகோதரர்கள் படமாக்க...
விஜய் ஆண்டனியை டான்ஸ் ஆட மேடைக்கு கூப்பிட்ட ஹீரோயின்.. கொலைகாரன் கலாட்டா..!

விஜய் ஆண்டனியை டான்ஸ் ஆட மேடைக்கு கூப்பிட்ட ஹீரோயின்.. கொலைகாரன் கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா ! ‬ ‪ பாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬   https://youtu.be/wNAa6QtIvXA ‪ கொலைகாரன் படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். https://youtu.be/6Lz5ifgVZpE நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக...
போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ  லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி... தர்பார் ஷூட்டிங் ஸ்டில் லீக் ஆகி மீண்டும் பரபரப்பு...! தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் எதுவும் வெளியாகமல் தடுக்க பல முயற்சிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்று மீண்டும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் படம் , வீடியோ ஒன்று லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் போலீஸ் காரில் இருந்து இறங்கி செல்வது போல...
சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி... வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..! தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் 26 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் சின்ன மாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள். முந்தைய விஷால் அணியில் நிர்வாக பதவிக்கு பொன்வண்ணன் தேர்வாகி இருந்தார். இப்போது அவர் இடத்தில் பூச்சி முருகன் நிறுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே பூச்சி முருகன் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்தார். முன்பு இருந்த விஷால் டீமில் குஷ்பு இல்லை. இப்போது செயற்குழு உறுப்பினர் பதவிக...