சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Corana virus

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கலை, அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின்னர் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலை...
‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் – சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு

‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் – சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘கோவிஷீல்டு, கோவேக்சின்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என்று திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘கோவேக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை. அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனிதர்கள் வாழ்க்கையில் ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது. அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்....
வைரஸ் பாதிப்பில் இறந்தவர் உடலை டிராக்டரில் எடுத்து சென்ற டாக்டரின் மனித நேயம்!

வைரஸ் பாதிப்பில் இறந்தவர் உடலை டிராக்டரில் எடுத்து சென்ற டாக்டரின் மனித நேயம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் ஒரு மருத்துவரின் மனித நேயம்! தெலுங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக ஸ்ரீராம் என்பவர் இருந்து வருகிறார்.  அவர், கொரானா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளார்.  இந்நிலையில், கொரானா பாதித்ததில் உயிரிழந்த ஒருவரது உடலை சவக்குழிக்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது.  ஆனால், சில காரணங்களுக்காக மாவட்ட நகராட்சி வாகன ஓட்டுனர் வர மறுத்துள்ளார். இதனால் நோயாளியின் உறவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் அவதிப்பட்டனர்.  தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.  இதனால் உடலை எடுத்து செல்ல டாக்டர் முன்வந்துள்ளார்.  இதன்படி, தனிநபர் பாதுகாப்பு உபகரணம் அணிந்து கொண்டு டிராக்டர் ஒன்றில் உடலை ஏற்றி அதனை அவரே சவக்குழிக்கு ஓட்டி சென்றார். கொரானா நோயாளியின் உடலை எடுத்து செல்ல பலரும் தயக்கம் காட்டி வரும் சூழலில், தெலுங்கானாவில் டாக்டர் ஒருவர் மற்றவர்களுக...
ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் - ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்... கலக்கத்தில் பிரபலங்கள்! இந்தியாவில் கொரானா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரானா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி...
அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது – மும்பை ஆஸ்பத்திரி தகவல்

அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது – மும்பை ஆஸ்பத்திரி தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது - மும்பை ஆஸ்பத்திரி தகவல் கொரானா தொற்று காரணமாக அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் , பேத்தி ஆராத்தியா ஆகியோருக்கு கொரானா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய  சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அமிதாப் , அபிஷேக் இருவரும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் டிவிட்டர...
முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.

முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.   கொரானா வைரஸ் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு வைரஸ் தாக்காது என்று உலக சுகாதார மையம் பல மாதங்களாக சொல்லி வருகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உட்பட சில பிரபலங்கள் ஆரம்பத்தில் இருந்தே மாஸ்க் அணிய மறுத்து வந்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பில் சிக்கி அபாய கட்டம்வரை சென்று உயிர்பிழைத்தார். ஆனால், அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட போதும் மாஸ்க் அணிய மறுத்தார் டிரம்ப். ஆனால்,...
கொரானா தடுப்பூசியை 18பேருக்கு செலுத்தி பரிசோதித்த ரஷ்யா… முடிவுக்கு காத்திருக்கும் உலக நாடுகள்!

கொரானா தடுப்பூசியை 18பேருக்கு செலுத்தி பரிசோதித்த ரஷ்யா… முடிவுக்கு காத்திருக்கும் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுதும் பரவி பல லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் மிக தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த சூழலில் உலகின் முதல் நாடாக ரஷியாவில் கொரானா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரானா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளது. ரஷியாவில் இது...
அய்யா… சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாயிருக்கு காப்பாத்துங்க – முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்

அய்யா… சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாயிருக்கு காப்பாத்துங்க – முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் வைரஸ் பரவலின் தீவிரத்தால் பயத்தில் இருக்கும் வெளி மாவட்ட மக்களை அவரவர் ஊர்களுக்கு செல்ல அனுமதியுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை இயக்குனர் சேரன் வெளியிட்ட டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது: அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்.. எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து. மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு ...
இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து! இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரானா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணம் 100 சதவிகித வரம்பை எட்டி, தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆய்வு, எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட...