சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: விஷால்

சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி... வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..! தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் 26 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் சின்ன மாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள். முந்தைய விஷால் அணியில் நிர்வாக பதவிக்கு பொன்வண்ணன் தேர்வாகி இருந்தார். இப்போது அவர் இடத்தில் பூச்சி முருகன் நிறுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே பூச்சி முருகன் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்தார். முன்பு இருந்த விஷால் டீமில் குஷ்பு இல்லை. இப்போது செயற்குழு உறுப்பினர் பதவிக...
நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறை கேடாக விற்பனை செய்த புகாரில் நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உட்பட 4 பேர் மீது மோசடி புகாரை நடிகர் சங்க தலைவர் நாசர் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சார்ஜ் ஷீட் போட்ட பிறகும் ராதாரவி, சரத்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி சரத்குமார் மற்றும் ராதாரவி வரும் 20ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் போலீசாரிடம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிலம் கையாடல் செய்ததாக சங்கத் தலைவர் நாசர் தொடர்ந்த வழக்கில் வரும் 20ஆம் தேதி காஞ்சீபுரம் குற்றவியல் போலீசாரிடம் முன...
வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் இந்த படம் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசியது: ஆர்.கே.சுரேஷிடம், நடிகர் சங்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, “நாசர் தலைமையில் தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவேன். ஆனால், விஷால் நின்றால் அவருக்கு எதிராக செயல்படுவேன். அதேபோல், விஷாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுபவர்களு உறுதுணையாக இருப்பேன். எனக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் என் ‘பில்லா பாண்டி’ படத்தை பார்க்காமல் விமசித்ததை கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்கள் சங்கத்தில் நாடக கலைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஜே.கே.ரித்தீஷின் மிகப்பெரிய பணி இருக்கிறது. ஆனால், அவரையே விஷால் தூக்கி எறிந்துவிட்டார். ...
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்... விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?   தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள். பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள். இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நட...
அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார். பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது. ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை...
விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அரசியல்வாதிகள்தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் விஷாலும் சேர்ந்து விட்டார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா முடிந்தவுடன் தான் திருமணம் என்று அறிவித்திருந்த நடிகர் விஷால் கட்டிடப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தனது திருமணத் தேதியை அறிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சங்கத்துக்குப் போட்டியிட்ட போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதியான ‘கட்டிடம் கட்டி முடிக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்ற அவரது வாக்குறுதியையும் மீறியிருக்கிறார். தமிழக அரசின் மீது தொடுத்த வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்தபோது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஏர்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுடன்  தனக்கு அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் முழுமைபெற குறைந்த ...
யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!

யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..! ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து முடிந்து ரிலீசுக்கு ரெடியானது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்போது வரும் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிலீசுக்கு இரண்டு தினங்கள் மட்டு...
தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய விஷால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய விஷால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
’எங்களுக்குள் உள்ள பிரச்சினையை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வோம். தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்திருப்பது சட்டவிரோதமான செயல்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் தாக்கல் செய்த அவசர  வழக்கில் மே 7ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தனி அதிகாரியை நியமனம் செய்தது, சட்டவிரோதம் என்றும், தனி அதிகாரி சேகர் நியமனத்தை தடை விதிக்க வேண்டும் என்றும் விஷால் தரப்பில் கோரப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், விஷால் தரப்பினர் முறையிட்டனர். விஷாலின்  கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தமிழக அரச...
மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!

மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!   நடிகர் விஷால் - அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்....
குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண விஷால் புது முயற்சி!

குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண விஷால் புது முயற்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண 'ரீச் தீஷா'வுடன் கைகோர்க்கும் விஷால் பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் 'தி திஷா ஹெல்ப்லைன் ' உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்...