ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”
நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.
ஒரு படம் பார்த்து முடித்தபின் படம் பார்த்தவர்கள் எழுந்து கிளாப் அடித்தால் அது வெற்றிப்படம். அல்லது ரசிக்கக்கூடிய வித்தியாசமான படம். இந்த கிளாப் படமும் அந்த வரிசையில் சேர தகுதியான படம்தான்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ விளையாட்டு தொடர்பான படங்கள் வந்திருக்கிறது. ஹிட் ஆகியிருக்கிறது. கவனம் பெறாமலேயே போயிருக்கிறது.
ஆனால், பிரித்விக் இயக்கி இருக்கும் இந்த கிளாப் புதுசாய் ஒரு விவகாரத்தை மெல்ல தொட்டிருக்கிறது. நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வெல்ல சிறந்த வீரர்களாக மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக அதே நேரம்,பொட்டில் அடித...









