தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!
தனுஷ் பிறந்தநாளை பிறந்தானைமுன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது .
இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள் கலந்துகொண்டனர் .
தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை .
இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் .
இந்த வி...









