செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!
சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜுலை 28-ந் தேதி மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தது.
இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர்.
12 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது.
இதையொட்டி சென்னை நேரு உள்வி...









