சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

HOME SLIDER

பாடகர் வேல்முருகன் வெளியேற  பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

பாடகர் வேல்முருகன் வெளியேற பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 17-வதாக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் நபராக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா. இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று 18-வது போட்டியாளராக 'சுசிலீக்ஸ்' சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடந்...
மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த வெள்ளியன்று மாலை மசூதியின் தெற்கு நுழைவாயிலை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாலைத் தடுப்புகளையும் மோதித்தள்ளி விட்டு வேகமாகச் சென்ற அந்த கார் சுவற்றில் மோதி நின்றது கார் வேகமாகச் செல்வதைக் கண்டதும் அதனைப் பின் தொடர்ந்து ஓடிவந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபர் அசாதாரண நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட போலீசார் அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ...
த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது பண மோசடி, மிரட்டல்,நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது பண மோசடி, மிரட்டல்,நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் என்ற படங்களின் தயாரிப்பாளர் வருண்மணியன். சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 27-ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த பிப்ரவரி மாதம் தையூரில் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமானத்தில், இரண்டு பிளாட்டுகளை தலா ரூ. 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிளாட்டுகளுக்கான முழுத்தொகை தராததால், தங்களிடம் தெரிவிக்காமல் வருண் மணியன் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே வெங்கடேசன் முன் தொகையாக கொடுத்த ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வருண் மணியன் கொரோனா காலம் என்பதால் திருப்பி தர காலதாமதமாக்கியதாக தெரிவித்துள்ளார். பின் அலுவலகம் ச...
ஐபிஎல் கிரிக்கெட் சென்னை அணி வெற்றி…பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப்!

ஐபிஎல் கிரிக்கெட் சென்னை அணி வெற்றி…பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப்!

HOME SLIDER, sports
  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில், சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பஞ்சாப் அணி இழந்தது. சென்னை அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி இந்த போட்டியை சந்தித்தது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் -மயங்க் சிறப்பாக ஆடிய நிலையில், நிகிடி பந்து வீச்சில், இருவரும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, பஞ்சாப் அணியின் ரன், சென்னை அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை பஞ...
‘நிச்சயமாக இல்லை’ எம்எஸ் டோனி பதில்!

‘நிச்சயமாக இல்லை’ எம்எஸ் டோனி பதில்!

HOME SLIDER, sports
  ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆட்டம் அபு தாபியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டாஸ் சுண்டியபோது வர்ணனையாளர் டேனி மோரிஸ்சன் சிஎஸ்கே-வுக்கான கடைசி போட்டியாக இது இருக்குமா? என்று டோனியை பார்த்து கேட்டார். அதற்கு எம்எஸ் டோனி நிச்சயமாக இல்லை! (Definitely Not!) எனப் பதில் அளித்தார். இதில் இருந்து எம்எஸ் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது....
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார்?

பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 6 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். மீதமுள்ள ஆஜித், வேல்முருகன், நிஷா, சோம் சேகர், சுரேஷ் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில், இன்று வெளியான புரோமோவில் வேல்முருகனை தவிர்த்து அனைவரும் வீட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள...
லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக அறிமுகம்!

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், கடந்த 1999-ம் ஆண்டு வெளியான தாஜ்மகால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து சமுத்திரம், மகாநடிகன், அல்லி அர்ஜுனா என சில படங்களில் நடித்து பிரபலமான மனோஜ், தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க உள்ள படம் மூலம் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அதே ஆண்டில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மனோஜ் எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது....
கட்டிய மனைவியை அடித்து நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன் – வன்னியரசு பகீர் ஆதாரங்கள்

கட்டிய மனைவியை அடித்து நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன் – வன்னியரசு பகீர் ஆதாரங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன்! தந்தி தொலைக்காட்சியில் இன்று வேல் யாத்திரை குறித்த விவாதத்தில் பங்கேற்றேன். பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என தொடர்ந்து புளுகிக்கொண்டே வந்தார் அஸ்வத்தாமன் என்னும் பாஜக நபர். நான் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தேன். வைத்ததுமே பதற்றமாகி ஆட்டத்தை குலைக்கிற வகையில் குறுக்கும் நெடுக்குமாக கத்திக்கோண்டே இருந்தார். நெறியாளரும் எனக்கு வாய்ப்பை மறுத்தார். தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கடந்து போனார். பெண்களுக்காக வழக்கு போடும் ஒரு நபர் தமது சொந்த வாழ்வில் பெண்ணை அதுவும் தான் கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி அடிப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லையா? இது பெண்களுக்கான குரல்தானே! சரி என்ன குற்றச்சாட்டை முன்வைத்தேன் என்றால், 1.சொந்த மனைவியை நிர்வாணப்படுத்தி அடித்து வரதட்சணை கேட்ட வழக்கு 2. தம் ம...
IPL  5விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்!

IPL 5விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்!

HOME SLIDER, sports, உலக செய்திகள்
IPL 5விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்!   ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 5 ரன்னிலும், கேப்டன் கோலி 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 32 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 வி...
தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நவ.1ஆம் தேதி தமிழ்நாடு தினம் தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியா சுதந்திரம் பெற்று எட்டு ஆண்டு காலம் ஆகியும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி” என்ற பெயரிலேயே செயல்பட்டு வந்தது. இதை மாற்றக்கோரி சென்னை பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தார். இதையடுத்து 1953ஆம் ஆண்டு மத்திய அரசால் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உள்படப் பலர் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாய் 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. பின...