செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: தனுஷ்

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..! மாமனார் ரஜினிக்கு பேட்ட படம் மூலமாக ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் மருமகன் தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தது. ஆனால் அதற்கு முன் ரஜினி படம் தொடங்கியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்....
வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - தனுஷ் அறிவிப்பு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படத்தை மூன்று பாகமாக தயாரிக்க தனுஷும் வெற்றுமாறனும் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து உருவாகி வரும் 'அசுரன்' படத்தை அடுத்து 'வடசென்னை 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வடசென்னை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வடசென்னை 2 படமாக உருவாகாது என்றும் தற்போது பிரபலமாகி வரும் வெப் சீரியஸ் ஆக உருவாகலாம் என்றும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அப்படி வெப் சீரியஸ் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டபடி வடசென்னை 2 உருவாகும். அதுவரை வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா...
மாமாவுக்கு “பேட்ட” கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்…!

மாமாவுக்கு “பேட்ட” கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாமாவுக்கு "பேட்ட" கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்...! பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மாமா ரஜினிக்கு பேட்ட படத்தின் மூலம் ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இப்ப மருமகன் தனுஷுக்கு படம் ரெடி பண்ணிட்டார்....
அசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..!

அசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வடசென்னை படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார். பரபரப்பாக நடந்த அசுரன் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரம் ஜிவி பிரகாஷ் இசையில் "பொல்லாத பூமி" என்ற பாடலையும் தனுஷ் பாடி பாடகராகவும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்....
மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..!

மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..! தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்னாரி ஜார்னி ஆஃப் தி பகிர்’ (The Extraordinary Journey of the Fakir) இப்போது இந்தியாவில் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், அடுத்து ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். இப்படத்தை தனுஷ் நடித்த முதல் இந்திப் படமான ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்....
மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் நடிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2  படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பா...
தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார். அவர் இப்போது "கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது. தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள். இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம். தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
தனுஷ் நடித்த பிரெஞ்ச்-ஆங்கில பட தமிழ் பதிப்பு பக்கிரி பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

தனுஷ் நடித்த பிரெஞ்ச்-ஆங்கில பட தமிழ் பதிப்பு பக்கிரி பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷ் நடித்த பிரெஞ்ச்-ஆங்கில பட தமிழ் பதிப்பு பக்கிரி பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..! நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது....
வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் தனுஷ் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் பக்கம் வருவதில்லை. ஏன்னா தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் மற்ற விஷயங்களை கவனிப்பது இல்லை. அப்படியே வந்தாலும் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் ஏதாவது பதிவிடுவார். இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.   https://twitter.com/dhanushkraja/status/1130516564984209410?s=19 அப்படி தனுஷ் சோகமாகும் நிலைக்கு என்ன காரணம் என்று ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசனின் லாஸ்ட் எபிசோட் இன்று ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த சீரிஸ் முடிவு பெற்றது பற்றி ஏராளமான ரசிகர்கள் சோகமாக பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் தன் பங்குக்கு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததுன்னு ரொம்ப பீலிங்கோட பதிவிட்டுள்ளார். ...
நான் அவ்வளவு நல்லவன் இல்லை – தனுஷ் ஓப்பன்

நான் அவ்வளவு நல்லவன் இல்லை – தனுஷ் ஓப்பன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தனுஷ் தன் ரசிகர்களுக்கு திடீரென கடிதம் எழுதி வெளியிட்டார். அதில் "என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட துள்ளுவதோ இளமை வெளியாகி 17 ஆண்டுகள் ஓடி விட்டதா... எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது. நடிப்பு என்றாலே என்ன என்று தெரியாமல் வந்த ஒரு சின்னப் பையனை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்டீர்கள். என் வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருந்து தோள் கொடுத்தீர்கள். என் இதயம் உங்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றியால் நிரம்பி வழிகிறது. இந்த 17ம் ஆண்டு நிறைவுக்கு வலைதளங்களில் நீங்கள் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச்செய்தி மற்றும் வீடியோக்களால் திக்குமுக்காடிவிட்டேன். நன்றி. மிக்க நன்றி. நான் ஒன்றும் அவ்வளவு சரியான நபர் அல்ல. ஆனால் நீங்கள் செலுத்தும் அளவு கடந்த அன்பால் என்னை இன்னும் கொஞ்சம் சரி செய்துகொண்டு பயணிக்க முயல்கிறேன்’என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ். கடந்த சில வாரங்களில் தனுஷ் ரசி...