வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: கொரானா முன்னெச்சரிக்கை

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதத்துக்கு ஒருமுறையாவது தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். கொரானா தொற்று தமிழகத்தில் நுழைந்த பிறகு அவர் சேலம் செல்லாமல் இருந்தார். கடந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகும் சென்னையிலேயே இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். வருகிற 20-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட உள்ளது. கொரானா தொற்றுவின் தாக்கமும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். சேலத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் எத...
கொரானா பாதித்தவர்களுக்காக தயாரான ரயில் பெட்டி ஆஸ்பத்திரி..!

கொரானா பாதித்தவர்களுக்காக தயாரான ரயில் பெட்டி ஆஸ்பத்திரி..!

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
  கொரானா பாதித்தவர்களுக்காக தயாரான ரயில் பெட்டி ஆஸ்பத்திரி..! ரயில் பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றி கொரானா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இரயில்வே முடிவு செய்தது. கரோனா வைரஸ் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில்வேத்துறை சார்பில் ரயில் பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணி கடந்த சில நாட்களாக பரபரபரப்பாக நடந்துவந்தது. இப்போது அந்த பணி நிறைவடைந்துள்ளது. கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மட்டும் போதாது என்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதை அடுத்தே ரயில்வேத்துறை சார்பில் ஏசி வசதி இல்லாத பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அந்த பணி முடிவடைந்துள்ள நிலையில், ஆய்வுக்குப் பின் பயன்பா...
மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களை காக்கவே 144 தடை உத்தரவு - முதல்வர் பழனிச்சாமி உடலால் தனித்திருப்போம். உள்ளத்தால் இணைந்திருப்போம். ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: மக்களை காப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு முதல் ஸ்டேஜ் அளவில் தான் உள்ளது. இரண்டு மூன்று நான்கு என அடுத்த கட்டங்களுக்கு போக விடாமல் தடுக்கவே தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். மற்றபடி சும்மா சுற்றுகிறவர்களுக்கு 144 தடை கண்டிப்பாக பொறுந்தும். மக்களை பாதுக்கத்தான் இந்த நடவடிக்கைகள். பொதுமக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 15 சிறப்பு படுக்கைவசதிகள் ஏற்படுத்தி இர...
ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி – நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி – நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி - நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்றுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பசியால் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொரு...
21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு மக்கள் வெளியேறாமல் தனிமையில் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார். இதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது… உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார். இ கமலின் இந்த கருத்து ...
தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும்... மீறினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை கொரானா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. தயவு செய்து அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். குறிப்பாக சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவ்ர்கள் தயவு செய்து உங்கள் பயண விவரங்களை தாமாக முன்வந்து சொல்லுங்கள். கண்டிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது. ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உத்தரவுகளை மீறுகிறவர்களை இனியும் அரசு வேடிக்கை பார்க்காது. நீண்ட காலமாக மருந்து எடுப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவைபடும் ம...
இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் – வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!

இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் – வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் - வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்! கொரோனா பீதியில் அனைவரும் அச்சத்தில் உள்ள நிலையில் ஒருபக்கம் அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து வருகிறது. இன்னோரு பக்கம் உயிரை காப்பற்ற போராடி வரும் மக்கள் மருத்துவர் திருத்தணிகாசலம். என்னிடம் கொரோனா நோயாளியை ஒப்படையுங்கள் நான் காப்பற்றித் தருகிறேன் என்ற முழக்கங்களுடன் மாதகணக்கில் போராடி வரும் மருத்துவர். ஏற்கனவே டெங்குவிற்கு மருந்து கண்டுபிடித்து சாதனையும் நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பல போராட்டங்களுக்கு பிறகு இவர் கண்டுபிடித்த மருந்தை சீனா அரசு ஏற்று அவருக்கு அழைப்பும் விடுத்தது. அதைபோல் எல்ல ஊடகங்களிலும் தன்னிடம் மருந்து இருப்பதை நிறுபித்து காட்டினார். அரசுக்கு தொடர்ந்து கொரோனா மருந்து கண்டுபிடித்ததை  நிறுபிக்கும் போராட்ட...
கொரானாவை ஒழிக்க வல்லரசுகளே திணறுகிறது அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுதும்  ஊரடங்கு – பிரதமர் மோடி உத்தரவு

கொரானாவை ஒழிக்க வல்லரசுகளே திணறுகிறது அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுதும் ஊரடங்கு – பிரதமர் மோடி உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள். இன்று இரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் சுய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் பெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும். ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். காட்டுத்தீ போல் கொரானா பரவி வருகிறது. . ஒருவருக்கு தெரியாமலேயே கொரானா தொற்று ஏற்படுகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். கொரானாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் சரி செய்து விடலாம். வல்லரசு நாடுகளாலேயே கொரானாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரானாவை கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாட்டுடன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான். பொருளாதாரத்தை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம். அரசின் நடவ...
கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிதி - முதல்வர் அறிவிப்பு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நேற்று தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, நேற்று மாலை விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் இன்று ம...