மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை.
நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய க...





