Author: Kodanki
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்
லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. இதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதை காண்பதற்காக கீர்த்திசுரேசுடன் அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் விஷால், இயக்குனர் லிங்குசாமி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பை காண குடும்பத்தினர் வந்ததால் கீர்த்திசுரேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
கீர்த்திசுரேஷ் சூர்யாவுடன் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைக்கு வந்துள்ளது. இப்போது விஷாலுடன் ‘சண்டக்கோழி-2’ விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ஏ.ஆர்.முரு...
உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..!
உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..!
பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வதேச சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேன்ட்ஸம் நடிகர் யார்? என்பதை அறிய நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் முதல் நபராக தேர்வாகியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த இடத்துக்கு ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்
அவருக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டது தொடர்பாக அந்த சர்வே நிறுவனம் தெரிவித்துள்ள விபரத்தின்படி, உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல பெண்களை கவர்ந்திழுத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும், திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்...
சினிமாவை மிஞ்சும் ஆக் ஷன்… சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்..!
சினிமாவை மிஞ்சும் ஆக் ஷன் அதிக வேகம்... கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்..!
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சுமார் இருபது அடி உயரத்துக்கு வானில் பறந்து எகிறிய கார், பக்கவாட்டில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொறுகி நின்றது.
பல் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில் பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கார் நிற்கும் காட்சியை கண்ட அப்பகு...
சமூக அவலத்தை அழுத்தமாக பதிக்கும் தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்
பியூனாக வேலை பார்பவர் மகனோ மகளோ அதே ஆபீசில் ஆபீசாரக பதவிக்கு வரமுடியாது அதற்கு மேலதிகாரிகள் இடம்தராமல் சூழ்ச்சியால் தகுதியிருந்தாலும் தட்டிக்கழித்து விடுவார்கள் என்ற ஒரு வரியையும், அரசு வேலைகளில் சேர திறமையை விட லஞ்சம்தான் முக்கியம் என்ற ஒரு வரியையும் எடுத்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வடிவமைத்திருக்கிற படம்தான் தானாசேர்ந்த கூட்டம்.
அயன் படத்தில் பார்த்த அதே துறுதுறு சூர்யா. ரொம்ப ஜாலியாக வந்து போகிறார். பெரிய அலட்டல் உருட்டல் அடிதடி கலாட்டாக்களை தவிர்த்து மிக திறமையாக தன் கதாபாத்திரத்தை சூர்யா எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மூவ் நடக்கும்போதும் சூர்யா சிக்கிக் கொண்டார் என நினைக்க வைத்து அதில் ஒரு டிவிஸ்ட் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சிவன்.
சூர்யாவுக்கு பொருத்தமான கதையாக தேர்வு செய்து அவரை அதற்கேற்றார்போல வேலைவாங்கி சூர்யா குட்வில் புத்தகத்தில் விக்னேஷ்சிவன் தனக்க...
பழைய கதை… காமெடி முயற்சி குலேபகாவலி – விமர்சனம்
கிராம கோயிலில் தாத்தா புதைத்து வைத்த விலைமதிக்க முடியாத புதையலை ஆள் வைத்து கொள்ளை அடிக்கும் அர்தபழைய கதைதான் என்றாலும் முழுக்க முழுக்க காமெடியாக முயற்சிக்கிறது குலேபகாவலி டீம்.
சிலை திருடும் பிரபுதேவா கும்பல், சின்னசின்ன 420 வேலைகளில் ஈடுபடும் ஹன்சிகா, அசந்த நேரம் ஆட்டைய போடும் ரேவதி கூட்டணி அமைத்து குலேபகாவலியை அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் ரேவதியின் கதாபாத்திர பெயர் மாஷா... அரங்கேற்றவேளை படத்தில் இதேபோன்று 420 வேலைகளில் ஈடுபடும் ரேவதியை அப்படியே வயசாக்கி ஏமாற்றுவதிலும் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு நன்றிகடனோ என்னவோ ஒரு காட்சியில் அரங்கேற்றவேளை வி.கே.ராமசாமி படமாக வந்து போவார்.
பிரபுதேவா வழக்கமான துறுதுறு ரோல். டான்ஸ், காமெடி, ஆக்ஷன் என பல பரிணாமங்களில் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்.
ஹன்சிகா அழகாக வருகிறார். கவர்ச்சியாகவும், தங்கை பாசத்திலும் மாறுபட்டு க...
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் - விமர்சனம்
தவணையில் எடுக்கும் வண்டிகளுக்கு தவணை கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களின் வண்டியை அவர்களுக்கே தெரியாமல் ஸ்கெட்ச் போட்டு எடுத்து வரும் கேரக்டர் விக்ரம்.
அப்படி வண்டி எடுக்கப்போன இடத்தில் தமன்னாவை பார்க்கிறார்... பக்கென காதல் பற்றிக்கொள்கிறது... அடிதடியில் இருக்கிற விக்ரம் ஐயர் பெண் தமன்னா காதல் கைகூடியதா... வில்லன்கள் என்ன செய்கிறார்கள்... யார் வில்லன் என்பதுதான் ஸ்கெட்ச் கதை.
ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
விக்...
நாய் பாஷையை புரிந்து கொள்ளும் ஆராய்ச்சி…இயற்கை சீற்றங்களில் தப்பும் முயற்சியா…
நாய் பாஷையை புரிந்து கொள்ளும் ஆராய்ச்சி...இயற்கை சீற்றங்களில் தப்பும் முயற்சியா...
தொழில்நுட்ப வளர்ச்சி எல்லை கடந்தது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணம். மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழ்ந்து வரும் செல்லப் பிராணிகளாக நாய்கள் இருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் தங்களது வீடுகளில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
உலகில் பெரும்பாலானோர் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வரும் நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இந்த வழிமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவணைகளை எளிமையான ஆங்கிலத்தில் மாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். கான் லெபோட்சிகோஃப் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமா...
கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்
கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..!
உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்
ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னாலும் சொன்னார் ஷெட்டில் தூசி படிந்து கிடக்கும் வண்டிகளும், ரிப்பேர் ஆகி ஓரம் கட்டப்பட்ட வண்டிகளும் அவரச கதியில் பிரசாரத்துக்கு ரெடியாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ரஜினியோ தனிக்கட்சி, அதிலும் ஆன்மீக அரசியல் என்று பொடி வைத்து பேசியிருக்கிறார். தமிழகம் மதசார்பற்ற மாநிலம் என்ற நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடுமா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் பிஜேபியின் ஆதரவோடுதான் ரஜினி ஆன்மீக அரசியல் நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை.
அதை மெய்ப்பிக்கும் விதமாக ரஜினியின் பாபா முத்திரையில் பாஜவின் தாமரை சின்னம் முன்பாகவும், அதற்கு பின்னால் பாபா முத்திரையும் இருந்தது.
வெளிப்படையாக விமர்சனங்கள் எழுந்த்தும் பா...
கொள்ளையன் நாதுராமை பிடிக்க சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!
சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!
ஒருவழியாக சிக்கிய கொள்ளையன் நாதுராம்
சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டுத் திருடப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரி எப்படியோ ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராஜஸ்தான் சென்றது. அங்கு கொள்ளையர் களைக் கண்டறிந்து நெருங்கும்போது இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் முதலில் இந்தக் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பின்பு, பெ...
