வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, kodanki darbar, kodanki headlines news, kodanki voice, NEWS, உடல் நலம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா  சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக்குனர் திரு வெற்றி மாறன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார். மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கியதுடன் ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மேலும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ' உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம் ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரை...

வாடகை வீடு இனி வேண்டாம்; “ஒன் ஸ்கொயர்” தரும் ஆஃபரை பாருங்க!

Uncategorized, World News
  பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் உண்மை. ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரபல கட்டுமான நிருவனமான ரூஃப்வெஸ்ட் (Roofvest) உருவாக்கி கொடுத்திருக்கிறது. கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குறியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக...
பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி…

பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி…

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  ஜெர்மனி நாட்டின் தலைநகரம் பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி.... ஜெர்மனியில் தற்போது சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகளுக்கான "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் வேர்ல்ட் கேம் 2023" நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் உலகத்தில் உள்ள பல நாடுகளில் இருந்து சிறப்பு குழந்தைகள், சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகள் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் கலந்துகொள்ள சென்னையை சேர்ந்த ஒரு சிறப்பு சிறுமி மற்றும் இரண்டு சிறப்பு இளைஞர்கள் என மூவர் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள சென்றனர்.  ஜூன் 20, 2023 அன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையில் இருந்து சென்ற 17 வயது சிறுமி பூஜா என்பவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற பூஜா 'Down Syndrome Trisomy 21'...
தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5   தென் மாவட்ட மக்கள் குறிப்பாக பெருசுகள் காதுகளில் சுமந்து திரிகிற தண்டட்டி’ எனப்படும் கனமான ஆபரணத்தை மையப்படுத்திய மண்மணம் மாறாத கதையில் காமெடியும் கலந்த படைப்பு தான் தண்டட்டி! கிராமத்தில் வயதான பெண்மணி இறந்துபோகிறார். அவரது காதுகளில் தொங்கும் சில லட்ச ரூபாய் மதிப்புமிக்க ‘தண்டட்டி’யை அவருடைய மகனும் மகள்களும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள், அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருக்கும் சுழலில் திடீரென அந்த தண்டட்டி காணாது போகிறது. வேறு ஒரு காரணத்துக்காக அந்த இடத்திற்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரிக்கு, தண்டட்டியை திருடியது யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பு தொற்றிக் கொள்கிறது. விசாரணையை தொடங்குகிறார். கதைக்களம் சூடுபிடிக்கிறது… தண்டட்டி யாரால...
மூழ்கி கிடக்கும் டைடானிக் கப்பலை பார்க்கப்போய் 5 பேர் பலி!

மூழ்கி கிடக்கும் டைடானிக் கப்பலை பார்க்கப்போய் 5 பேர் பலி!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி உட்பட 5 பேர் இருந்தனர். ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை கடந்த 4 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டது. நீர் மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டு இருந்த 96 மணி நேர கெடு நேற்று காளியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக...
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி

மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகைகள்
  மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி பெண்களுக்கு பிரச்சனை என்றால் தேசிய  மகளிர் ஆணையம் கேள்வி கேட்கும் என கூறிய பாஜக நிர்வாகி  குஷ்பூ, மல்யுத்த வீராங்களைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  தன்னை பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதாகி கூறி பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும்  குஷ்பூ தனது அலுவலகத்திலிருந்து செய்தியார்களுக்கு அளித்த  பேட்டியில் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். பெண்களை பற்றி அவதூறாக பேச தந்தைக்கோ கணவருக்கோ உரிமை இல்லாத போது  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு பொதுக்கூட்டத்தில் எப்படி பேச உரிமை இருக்கிறது ?  என கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார்.   அ...
”ரேவ் பார்ட்டியால்” இளைஞர்களுக்கு ஏற்படும் சேதம்!

”ரேவ் பார்ட்டியால்” இளைஞர்களுக்கு ஏற்படும் சேதம்!

CINI NEWS
போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா கவுட கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷ் சித்திபாலி, ரித்திகா சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா கவுடா, சுச்சந்திர பிரசாத், தாரக் பொன்னப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைசூர், உடுப்பி, பெங்களூர், மங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெறும் 35 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பான் இந்தியா’ திரைப்படமான ‘ரேவ் பார்ட்டி’ வரும் ஆகஸ்ட் மாதம் ...
வரவேற்பை பெற்ற எல் ஜி எம்’ பட டீசர்

வரவேற்பை பெற்ற எல் ஜி எம்’ பட டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வரவேற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் 'எல் ஜி எம்' பட டீசர் தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவ...
ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு

ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'ரெஜினா' பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு* *'ரெஜினா' பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்* யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே-30ல் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்ற நிலையில், நேற்று (ஜூன்-5) மாலை இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் இசை ...
’ஜெயிலர்’- படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

’ஜெயிலர்’- படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sunpict...